படத்தில் இருந்து தூக்கும் அளவுக்கு வடிவேலு மீது ரஜினிக்கு அப்படி என்ன கோவம் ? உண்மை என்ன ?

0
76870
rajini vadivelu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தலைவர் ரஜினிகாந்த் நடித்து உள்ள படம் “தர்பார்”. இந்த படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் திரையரங்கில் வெளியாகும் என்ற தகவல் வந்துள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைத்தொடர்ந்து வீரம், விவேகம்,விசுவாசம் என அல்டிமேட் ஸ்டார் அஜீத் குமாரை வைத்து பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சிவா தான் ரஜினிகாந்தை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதிக்கு முன்னதாகவே தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

-விளம்பரம்-
vadivelu

இந்நிலையில் இந்த படத்தில் காமெடி நடிகராக சூரி தான் நடிக்க உள்ளார் என்று தெரிய வந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் தற்போது எவ்வளவு காமெடி நடிகர்கள் வந்தாலும் கவுண்டமணி, செந்தில், வடிவேலு காமெடிக்கு ஈடாகாது. நடிகர் வடிவேலு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர். தற்போது ரஜினிகாந்தை வைத்து சிவா இயக்கும் புதிய படத்தில் முதலில் வடிவேலை ஒப்பந்தம் செய்வதாக இருந்தது.

- Advertisement -

ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும், வடிவேலுக்கும் ஏற்கனவே சில பிரச்சினைகள் இருந்ததால் வடிவேலு இந்த படத்தில் நடிக்கவில்லை என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும், சந்திரமுகி திரைப்படத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து செய்த நகைச்சுவை கலாட்டாவுக்கு அளவே இல்லை. இன்று கூட மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கிறது. அப்படி என்ன இவர்கள் இருவருக்கும் நடந்தது என்று பார்த்தால் …சமீபத்தில் ஒரு பேட்டியில் வடிவேலு அவர்கள் கூறியது, ‘ரஜினியின் ராணா திரைப்படத்தை ராணாவாவது, காணாவாவது‘ என்று கிண்டலும் கேலியுமாக பேசியுள்ளார். அப்போதிலிருந்து ரஜினிக்கும் வடிவேலுக்கும் இடையே பிரச்சனை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் ரஜினி கண்டுகொள்ளவேமாட்டார் அவருக்கு வடிவேலு மீது எந்த ஒரு தனிப்பட்ட வருத்தமும் எல்லை என்றும், படத்தில் நடிகர்களை தேர்வு செய்யும் பொறுப்பு அனைத்தும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுடையதே என்றும் ஒரு தரப்பு கூறுகிறது.

Rajini

வடிவேலு இந்த படத்தில் இல்லை என்று சொன்னவுடன் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் வருத்தம் தான். அவருக்கு பதிலாக நடிகர் சூரியை ஒப்பந்தம் செய்யது உள்ளதாக செய்திகள் வந்தன. சமீபகாலமாகவே நடிகர் சூரியின் காமெடி எடுபடவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் ரஜினிகாந்த் — சூரியின் கூட்டணி எப்படி இருக்கும் என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும், இந்த படம் கிராமத்தை மையமாக வைத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும் என்பது கோடம்பாக்க வட்டாரத்தின் தகவல். இது ரஜினிகாந்தின் 168 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement