நாடகத்தில் நடித்ததால் வந்த சிக்கல், ராஜிவ் காந்தி இறப்பிற்க்கு பின் தலைமறைவு – சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட சோகம்.

0
663
Rajiv
- Advertisement -

சினிமா என்பது எப்போதுமே ஒரே மாதிரியாக இருக்காது என்று உணர்த்தும் வகையில் பல விதமான நிகழ்வுகளை நாம் சமீப காலமாக பார்த்து வருகிறோம். ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான இருந்த நடிகைகள் கூட தற்போது கேட்பார் ஆளின்றி வறுமையில் வாடி வருகின்றனர். பிரபல நடிகர்களுக்குகே இந்த நிலைமை என்றால் துணை கதாபாத்திரங்களிலும், ஒரு சில படங்களில் மட்டுமே சில கதாபாத்திரங்கள் கிடைத்ததன் மூலம் வாழ்க்கையை நடத்தும் நட்சத்திரங்களின் நிலையை இதைவிட மோசமானது.

-விளம்பரம்-

அப்படி சினிமா துறையில் இருக்கும் ஆயிரக்கணக்கான நடிகைகளில் ஒருவர் தான் “பாண்டவர் இல்லம்” போன்ற பிரபலமான சீரியல்களிலும். சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாகவும் நடித்த சுபீதா. இவர் தற்போது சென்னையில் வேளச்சேரியில் வசித்து வருகிறார். தற்போது இவர் துணை கதாபாத்திரத்தில் பட வாய்ப்புகளின் கிடைக்காமல் சீரியல்களில் கூட வாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்படுவது குறித்து சமீபத்தில் பிரபல ஊடகம் எடுத்த நேர்காணலில் கூறியுள்ளர்.

- Advertisement -

நடிகை சுபீதா பேட்டி :

நடிகை சுபீதா நேர்காணலில் கூறியதாவது “நான் என்னுடைய 13 வயதில் நடிக்க வந்தேன். அப்படி நான் நடித்த முதல் நாடகம் இலங்கையில் தனி நாடு வேண்டும் என்று போராடிய போராட்டத்தையும் அதற்கான காரணத்தையும் விளக்கும் நாடகம் தான் அது. நான் நடிக்க தொடங்கிய காலத்தில் விடுதலை புலிகள் தமிழ் நாட்டிற்கு அடிக்கடி வந்து சென்று கொண்டிருந்தனர். எங்களுடைய வீட்டிலும் என்னுடைய அப்பா விடுதலை புலிகளின் ஆதரவாளர் தான்.

ராஜிவ் காந்தி மறைவு :

ஆனால் எனக்கு இவர்களை பற்றியும் பிரபாகரன் பற்றியும் பெரிதாக தெரியாது. நான் அந்த நாடகத்தில் நடிக்கும் போது எங்களுடன் நடிகர் நாசர் சேர்ந்து நடித்தார். அப்போது புகைப்படம் எடுக்க அழைத்தார்கள். அப்படி புகைப்படம் எடுப்பது பிரபாகரன் என்று அப்போது எனக்கு தெரியாது. நாங்கள் நடிக்கும் நாடகத்தை கேசட் வடிவில் இலங்கையில் உள்ளவர்களுக்கு காட்டுவார்கள் என்று கூறினார்கள். இப்படியொரு நிலையில் ராஜிவ் காந்தி திடீரென தீர்த்துக்கட்டப்பட்ட சம்பவம் எங்களுடைய வாழ்க்கை தலைகீழாக மாற்றியது.

-விளம்பரம்-

கணவர் மறைவு :

அதற்கு பிறகு சில காலம் எங்களுடைய குடும்பம் தலைமறைவாக வாழ்ந்தோம். கேசட் உள்பட இலங்கை சம்மந்தப்பட்ட எந்த விஷயமும் எங்களுடம் இல்லாமல் அழித்துவிட்டோம். அதே நேரத்தில் இலங்கை சம்மந்தப்பட்ட அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்தார்கள். ஆனால் எங்களை கைது செய்யவில்லை. பின்னர் எனக்கு திருமணமாகி என்னுடைய கணவர் நோயினால் இறந்துவிட்டார். அதற்கு பிறகு என்னுடைய குழந்தைகளை வைத்துக்கொண்டு அதிகம் கஷ்டப்பட்டேன்.

வாய்ப்புகளை தேடி அழைகிறேன் :

நான் சினிமாவில் நடித்தாலும் அதில் போதுமான அளவு வருமானம் கிடைக்காத காரணத்தினால் சீரியலில் நடிக்க வந்தேன். என்னுடைய பெரியமகன் தற்போது திருமணமாகி அவனுடைய குடும்பத்தை பார்த்துக்கொள்கிறான். என்னுடைய இளைய மகன் சினிமாவில் சன்டை பயிற்சியாளராக முயற்சி செய்து வருகிறான். அவனுடைய வருமானம் போதிய அளவு இல்லாத காரணத்தினால் மீண்டும் நடிக்க தொடங்கலாம் என்று நினைத்து வாய்ப்புகளை தேடி அழைத்தேன்.

ஆனால் துரதிஷ்ட வசமாக எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதனால் ஒரு முறை என்னை அறியாமலேயே திடீரென பிச்சை எடுக்க தொடங்கிவிட்டேன் எனக் கூறினார். மேலும் தான் நடிகர் நாசரை சந்தித்ததாகவும் ஆனால் அவரிடம் வாய்ப்பு எதுவும் கேட்கவில்லை என்றும், தனக்கு சீரியலில் வாய்ப்பு கிடைத்தலே போதுமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் நடிகை சுபீதா.

Advertisement