வாரிசு பட நடிகையின் உடன்பிறந்த சகோதரி, கொடிய நோய், பண கஷ்டம் – ஜானி பட நடிகையின் பரிதாப நிலை.

0
720
Varisu
- Advertisement -

வாரிசு பட நடிகையின் சகோதரிக்கு கேன்சர் ஏற்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். இவருடைய நடிப்பில் ஜனவரி மாதம் வெளியாகியிருந்த படம் தான் வாரிசு. இந்த படம் மிக பெரிய அளவில் செய்து இருந்தது. மேலும், இந்த படத்தில் விஜயின் அம்மாவாக நடித்திருந்தவர் தான் ஜெயசுதா.

-விளம்பரம்-

இவர் தென் இந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர். முதலில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். பின் வாய்ப்புகள் குறையை தொடங்கியவுடன் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார். இவருடைய சகோதரி தான் சுபாஷினி.

- Advertisement -

இவரும் தென்னிந்திய சினிமாவுலகில் மிகப் பிரபலமான நடிகை தான். இவர் அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்ற படத்தில் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அதற்குப் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறையை தொடங்கியவுடன் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். குறிப்பாக, இவர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் கதாநாயகனின் அம்மாவாக நடித்திருந்தார். அதற்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் வெளிவந்திருந்த அருந்ததி படத்தில் வில்லன் பசுபதியின் அம்மாவாக நடித்திருந்தார். இப்படி முக்கியமான கதாபாத்திரங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் சுபாஷினி.

-விளம்பரம்-

மேலும், இவர் படங்களில் மட்டும் இல்லாமல் தொடர்களிலும் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் தெலுங்கு சீரியல்கள் தான் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவர் கேன்சர் நோயால் அவதிப்பட்டு இருக்கும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. 2013 ஆம் ஆண்டு தெலுங்கில் ஒரு படத்தில் நடித்ததற்கு பிறகு இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சில ஆண்டுககளுக்கு பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் இவர் மிகுந்த பண நெருக்கடியில் சிக்கினார்.

தான் சம்பாதித்த பணத்தை உறவினர்கள் ஏமாற்றியதால், நோய்க்கு சிகிச்சை பெறவும் பணமில்லாமல் மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறார் என்பது சற்று வேதனை அளிக்கிறது. தற்போது அவர் சிகிச்சையும் எடுத்து வருகிறார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து பலருமே இவர் குணமடைந்து வர வேண்டும் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement