திரிஷாவின் அம்மாவை பார்த்திருப்பீங்க. அவரது மறைந்த தந்தையை பார்த்துள்ளீர்களா ?

0
10346
Trisha
- Advertisement -

தமிழ் திரையுலகில் ‘ஜோடி’ என்ற படத்தில் மிகச் சிறிய வேடத்தில் நடித்தவர் நடிகை த்ரிஷா. இதனைத் தொடர்ந்து ‘மௌனம் பேசியதே’ என்ற படத்தில் நடித்தார் த்ரிஷா. இது தான் நடிகை த்ரிஷா ஹீரோயினாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம். ‘மௌனம் பேசியதே’ படத்துக்கு பிறகு ‘மனசெல்லாம், சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி’ போன்ற சில படங்களில் நடித்தார் த்ரிஷா.

-விளம்பரம்-

அதன் பிறகு தமிழ் திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை த்ரிஷா, அடுத்ததாக தெலுங்கு திரையுலகிலும் நுழைந்தார். இப்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் த்ரிஷா. மேலும், அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

- Advertisement -

தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் த்ரிஷா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷா நடித்து 2018-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ’96’. இந்த படத்தினை பிரேம் குமார் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

Trisha - Happy Fathers Day ♥ ♥ !! | Facebook

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா ஆகிய இருவரின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று மெகா ஹிட்டானது. ’96’ படத்துக்கு பிறகு த்ரிஷா ஒரு சிறிய வேடத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தினை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இப்படம் நடிகை த்ரிஷாவிற்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இதில் ஹீரோவாக தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

பொதுவாகவே நடிகை த்ரிஷா அவரது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அதிகம் வெளி வந்திருக்கிறது. இப்போது, த்ரிஷா அவரது அப்பாவுடன் இணைந்து இருக்கும் ஒரு ஸ்பெஷல் புகைப்படம் வெளி வந்திருக்கிறது. இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. நடிகை த்ரிஷாவின் அப்பா 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement