உச்சகட்ட கோபத்தில் காமெடி நடிகை வித்யுலேகா.! காரணம் இதுதான்.! புகைப்படம் உள்ளே

0
869
Vidhyu

சில நாட்களுக்கு முன்னர் முகநூல் பயன்பட்டாளர்கள் சிலர் தங்களது தனிப்பட்ட முக நூல் கணக்கில் உள்ள விவரங்கள் ஹேக் செய்யப்பட்டது என்று புகார் அளித்திருந்தனர். இதனால் முகநூல் நிறுவனர் மார்க் மீது விசாரணை கூட வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரபல நடிகை வித்யூ லேகாவின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்டுள்ளது.

vidhyulekha

- Advertisement -

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம் “படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வித்யூ லேகா. காமெடி நடிகையாக அறிமுகமான இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார்.

காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பால் தமிழ் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர், தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வருகிறார். மேலும், சந்தானம், உள்ளிட்ட நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் வித்யூலேகா சமீபத்தில் தன்னுடைய முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டு தற்போது அது வேறு ஒரு நடிகையின் பெயரில் இயங்கி வருகிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

இதுகுறித்து அவர் ட்விட்டரில் தெரிவிக்கையில் ‘ மிகவும் அதிர்ச்சியான, மர்மமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. என்னுடைய வித்யு லேகா என்ற பெயரில் உள்ள 450 ஆயிரம் நபர்களால் பின் தொடரப்பட்ட முகநூல் பக்க கணக்கை யாரோ சில சமூக விரோதிகள் ஹேக் செய்துள்ளனர். இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், அந்த துரோகி கண்டிப்பாக மாட்டுவர்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement