தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை வினோதினி. 80 களில் வெளியான ‘மணல் கயிறு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று பல்வேறு மொழிகளில் நடித்திருந்தார்.
இறுதியாக 2007 ஆம் ஆண்டு ‘கொஞ்சம் கொஞ்சம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். திரைப்படங்கள் மட்டுமின்றி தமிழில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது கணவர் வெங்கட் ஸ்ரீதர்(52) பீல்டிங் கான்ட்ராக்டராக உள்ளார்.
இதையும் படியுங்க : நடிகர் ஓமகுச்சியின் மகனை பார்த்திருக்கீங்களா. பாவம் இவருக்கு இப்படி ஒரு நிலையா.!
இந்த நிலையில் நேற்று (மே 14 )திருவான்மியூரில் இருந்து அண்ணா சதுக்கம் வரை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் ஸ்ரீதர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு முன் சென்ற போது இவரது வாகனம் எதிரே வந்த வண்டி மீது மோதியது.
இந்த விபத்தில் ஸ்ரீதருக்கு எதிரே வந்த நபருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அடையாறு போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் ஸ்ரீதருக்கு வயிறு மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.