ஸ்ரீ லீக்ஸ்..! அஜித் பட நடிகை பாலியல் தொல்லை.! பணம் கொடுக்கவில்லை.! அதிர்ச்சி தகவல்

0
154
Sri-Redy
- Advertisement -

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ‘தமிழ் லீக்ஸ்’ என்ற பெயரில் தமிழ் திரையுலக பிரபலங்களை பற்றிய சர்ச்சையான விடயங்ககளை முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது சென்னையில் தங்கியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை பாவனா குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

sri reddy
கடந்த ஆண்டு நடிகை பாவனாவை அவரது முன்னாள் கார் டிரைவர் மற்றும் அடையாளம் தெரியாத சில நபர்கள், ஓடும் காரில் வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் புகார் அளித்ததன்பேரில், இதுவரை 4 பேரை காவல்துறை கைதுசெய்தனர். மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் மலையாள நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஸ்ரீரெட்டி ”நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு உள்ளான போது ஓட்டுமொத்த திரையுலகமே பொங்கி எழுந்தது. அவர் குற்றம் சாட்டிய நபர்கள் மீதும் உடனடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனால், என்னுடைய விடயத்தில் யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. என்னுடைய பெற்றோர் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள்.

- Advertisement -

bhavana

நான் பலருடன் உறவு வைத்துக்கொண்டதால் என்னை பலரும் என்னை ஒரு விபச்சாரி என நினைக்கிறார்கள். நான் விபச்சாரியாக இருந்திருந்தால் உடலுறவு வைத்துக்கொண்ட பின்னர் பணம் வாங்கி இருப்பேன். ஆனால், என்னுடன் உடல்லுறவு வைத்துக்கொண்ட பின் எனக்கு உணவு கூட வாங்கி தராமல் என்னை விரட்டினார். இது எனக்கு மிகவும் அவமானமாக உள்ளது.’ என்று உருக்கத்துடன் கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீரெட்டி கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும், இது பின்புலம் இல்லாத குற்றச்சாட்டு என்றும் பலரும் கூறி வருகின்றனர். அதே போல ‘தான் இதை எதையும் விளம்பரத்திற்காக செய்யவில்லை, யாராவது ஒருவர் இந்த விடயங்களை வெளியில் கொண்டு வர வேண்டும், அதனால் தான் இதை செய்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.

Advertisement