பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மோனலிசா. இவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் போஜ்புரி மொழியை சேர்ந்தவர். அதோடு போஜ்புரி இவர் படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். இதுவரைக்கும் இவர் 125க்கும் மேற்பட்ட போஜ்புரி படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஹிந்தி, பெங்காலி, ஒடியா ,தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் நடிகர் அர்ஜுனுடன் வாத்தியார் படத்திலும், நடிகர் சிம்புவுடன் சிலம்பாட்டம் என்ற படத்திலும் மோனலிசா நடித்துள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் இவர் காதலுக்கு மரணமில்லை, என் பெயர் குமாரசாமி ஆகிய பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் அதே கண்கள் என்ற சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் ஹிந்தி சீரியலின் டப்பிங். இந்த சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பெரிதாக பேசப்பட்டு வருகின்றது.
அதோடு மோனலிசா ஹிந்தி பிக் பாஸ் சீசன் 10ல் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இவர் போஜ்புரி நடிகர் விக்ரம் சிங் ராஜ்புட் என்பவரை பிக் பாஸ் வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை மோனலிசா அவர்கள் தனது இணையப்பக்கத்தில் மிகவும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
எப்போதும் நடிகை மோனலிசா அவர்கள் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருப்பார். இவர் தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் சமீபத்தில் நடிகை மோனலிசா அவர்கள் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் வானத்தை பார்த்து கொண்டு படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.