எனக்கு சம்பளம் கொடுக்குறாங்க, நான் நடக்கிறேன் – திட்டி தீர்க்கும் ரசிகர்களுக்கு கோபி வெளியிட்ட வீடியோ.

0
29160
bhagyalakshmi
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

தமிழில் பல கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “ஸ்ரீமோய் ’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியல் தமிழில் மட்டுமல்ல கன்னட, மராத்தி, மலையாளம், தெலுகு மற்றும் ஹிந்தியிலும் ஒளிபரப்ப படுகிறது.இந்த சீரியலில் இல்லத்தரசியின் பொறுப்புகளை எடுத்துரைக்கிறது.மேலும், அவர் படும் பாடுகள் என்ன சில சமயம் பிள்ளைகள், கணவர், மாமியார், மாமனார் இல்லத்தரசியை எப்படி அவமதிக்கிறார்கள்.

இதையும் பாருங்க : அட, கர்ணன் படத்தில் கலக்கிய இந்த பையன் சத்யா சீரியல் நடிகரோடு நடித்துள்ளாரா. இதோ புகைப்படம்.

- Advertisement -

பாக்கியலட்சுமி எல்லாவற்றையும் எப்படி அனுசரித்துப் போகிறாள். ஒரு கட்டத்தில் அவளின் சுயமரியாதையை எப்படி போராடி மீட்டெடுத்தாள் என்பது தான் கதை. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக கோபிநாத்தும் நடித்து வருகிறார். மேலும், இந்த சீரியலில் இவர் தனது முன்னாள் காதலியோடு தொடர்பில் இருப்பது போல தான் காண்பிக்கப்பட்டு வருகிறது/

இப்படி ஒரு நிலையில் சமூக வலைதளத்தில் பலரும் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர். அதில் ஒருவர் ‘இந்த கோபி பையன பாத்தாதான் எரிச்சல் ஆகுது. நல்ல பொண்டாட்டி கிடெச்சி இருக்கு அதன் அவனுக்கு கொழுப்பு ‘ என்று கமன்ட் செய்து இருந்தார் இதற்கு பதில் அளித்த கோபி, சமூக வலைத்தளத்தில் இவரது கதாபாத்திரத்தால் பலரும் இவரை திட்டி தீர்த்து வரும் நிலையில் இதற்கு பதில் அளித்துள்ளார் கோபி.

-விளம்பரம்-

அதில், எல்லாரும் என்மீது கோபமாக இருகிறீர்களா அதற்கு நான் என்ன பண்ணமுடியும் முதலாளி சம்பளம் கொடுக்கிறார் நடித்தாக வேண்டும் ஆனால் உண்மையை சொல்லுங்கள் ஹீரோவாக நடிப்பதில் ஏதாவது சுவாரஸ்யம் இருக்குமா வில்லனாக நடித்தால் தான் சுவாரசியமாக காட்டமுடியும் எல்லாவற்றுக்கும் மேலாக அது வெறும் அதைதான் நீங்கள் எவ்வளவு திட்டினாலும் கோபித்துக் கொண்டாலும் அது நீங்கள் எனக்கு கொடுக்கும் விழுதாக எடுத்துக் கொள்கிறேன்.

Advertisement