அதிமுகவின் தொகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கவில்லையா? – அருவி பட நடிகை அதிதி பாலன்

0
373
Aditi
- Advertisement -

தற்போது சோசியல் மீடியா முழுவதும் மிக்ஜாம் புயல் குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து இருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மட்டும் இல்லாமல் சில தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுத்திருக்கிறார்கள். பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், கன மழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு இது வரலாறு காணாத மழை என்றும் கூறுகிறார்கள். நேற்று காற்றின் வேகம் குறைந்து மழை பெய்யும் அளவும் குறைந்திருப்பதால் மீட்பு பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

- Advertisement -

மிக்ஜாம் புயல்:

மேலும் இது தொடர்பாக சோசியல் மீடியாவிலும் பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் உதவி தேவைப்படுபவர்களும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு உதவி கேட்டு வருகிறார்கள். இதனால் அரசு அதிகாரிகளும் விரைந்து உதவி செய்து வந்தார்கள். இந்நிலையில் மிக்ஜாம் புயல் குறித்து நடிகை அதிதி பாலன் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர், நான் திருவான்மியூர் ராதாகிருஷ்ணன் நகருக்கு சென்றிருந்தேன்.

அதிதிபாலன் பதிவு:

அங்கு சுற்று வட்டார பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் தான் தற்போது இந்த ஏரியாவுக்குள் வந்து இருக்கிறது. இதனால் இறந்து போன விலங்குகள் எல்லாம் மிதந்து கொண்டிருக்கின்றது. இரண்டு குழந்தைகளையும் அவர்களின் பாட்டியும் காப்பாற்றுவதற்காக நாங்கள் இந்த தேங்கிய தண்ணீரில் நடக்க வேண்டி இருந்தது. இதற்கிடையில் கோட்டூர் புறம் அருகே ஆறு போலீசார் ஒரு பணக்கார பெண்ணை காப்பாற்ற படகை எடுத்து சென்றிருந்தார்கள் என்று பதிவிட்டிருந்தார். இதை பார்த்து பலருமே அவருக்கு பதில் அளித்து வந்திருந்தார்கள்.

-விளம்பரம்-

நெட்டிசன் பதிவு:

அப்போது இதை பார்த்த பாதிக்கப்பட்ட ஒருவர், இது உண்மைதான். இங்கு குடும்பங்கள் வசித்து இருக்கின்றது. இந்த ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து மின்சாரம் இல்லை. நாங்கள் வீட்டின் மாடியில் இருந்து சில தொலைபேசி எண்களுக்கு அழைத்து பார்த்தோம். அந்த எண்களுக்கான இணைப்புகளை எதுவும் செய்யவில்லை. எங்கள் வீட்டின் முன்புறத்தில் இறந்து போன எலிகள் மிதந்து கொண்டிருந்தது. குழந்தைகளை காரில் தூங்க வைத்துவிட்டு வீட்டை மேலே மாற்றம் செய்து வருகிறோம் என்று கூறி இருந்தார்.

அதிதிபாலன் பதில்:

இதற்கு அதிதிபாலன், அதிமுகவின் தொகுதிகளில் வெள்ள நிவாரண வேலைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்பது உண்மையா? அரசுக்கு பதிலாக மீனவர்கள் அவர்களை காப்பாற்றுகிறார்களா? வேளச்சேரி, மேடவாக்கம், அதன் சுற்று பகுதிகளில் வசிக்கும் என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் படகுகளின் மூலம் தான் மீட்டப்பட்டு இருக்கின்றனர் என்று பதிவிட்டு இருக்கிறார். தற்போது அதிதிபாலன் பதிவுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியா மூலம் உதவி கேட்கும் பல பேருக்கு அதிதி பாலன் பதில் அளித்து வருகிறார்.

Advertisement