ப்பா, அதிதியா இது ? DDயின் திருமணத்தில் எப்படி இருக்கார் பாருங்க – 8 வருசத்துல என்ன ஒரு Transformation.

0
696
aditi
- Advertisement -

விருமன் பட வெற்றி விழா கொண்டாட்டத்தில் அதிதி சொன்ன மொக்க ஜோக்கால் நெட்டிசன்கள் பலர் அவரை வச்சி செய்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

-விளம்பரம்-

இதில் இரண்டு மகள்களுமே மருத்துவம் படித்தவர்கள். டாக்டரான ஐஸ்வர்யா ஷங்கர், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் திருமணம் செய்து கொண்டார். இந்த சூழ்நிலையில் இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக களம் இறங்கி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டு இருக்கும் கார்த்தி படத்தில் தான் சங்கர் மகள் அதிதி நடித்து இருக்கிறார்.

- Advertisement -

விருமன் படம் :

கார்த்தி ஹீரோவாக நடித்து இருக்கும் படம் ‘விருமன்’. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி இருக்கிறார்.கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்திக் மற்றும் முத்தையா இந்த படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

முதல் படமே ஹிட் :

விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் மூலம் தான் அதிதி சங்கர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக களம் இறங்கி இருக்கிறார்.இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இந்த படத்தில் இடம் பெற்ற மதுர வீரன் பாடலை அதிதி தான் பாடி இருக்கிறார். இந்த படம் வெளியாகி நல்ல வசூல் சாதனை படைத்திருக்கிறது.

-விளம்பரம்-

டிடி திருமணத்தில் அதிதி :

அது மட்டுமில்லாமல் நடிகை அதிதிக்கும் இந்த படம் சிறந்த தொடக்கமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் அதிதிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.முதல் படத்திலேயே அனுபவம் வாய்ந்த நடிகை போல தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் அதிதி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல தொகுப்பாளினியான டிடியின் திருமணத்தில் கலந்துகொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அடுத்தடுத்து படங்களில் அதிதி :

அதில் அதிதி தற்போது இருப்பதை விட கொஞ்சம் பப்லியாக காணப்படுகிறார்.இதை பார்த்த ரசிகர்கள் பலர் அதிதியா இது என்று ஆச்சரியப்பட்டுள்ளனர். விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அதிதி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் ‘மாவீரன்’ படத்தில் அதிதி நாயகியாக கமிட் ஆகி இருக்கிறார். அதை தொடர்ந்து சிம்புவின் கொரோனா குமார் படத்திலும் நாயகியாக கமிட் ஆகி இருக்கிறார்.

Advertisement