அஜித்திடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார் விஜய். அவருடன் ஒரு படம் பன்னலாம்னு பார்த்தேன். ஆனால் – விஜய் பட இயக்குனர் பேட்டி.

0
4321
Vijay
- Advertisement -

விஜய் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளி வந்த சுறா படத்தினை இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியிருந்தார். இதில் ‘தளபதி’ விஜய்-க்கு ஜோடியாக பிரபல நடிகை தமன்னா நடித்திருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு, தேவ் கில், ரியாஸ் கான், ஸ்ரீமன் ஆகியோர் நடித்திருந்தனர். ‘தளபதி’ விஜய்யின் திரை உலக வாழ்வில் ‘சுறா’ திரைப்படம் அவருக்கு 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

விஜய் நடித்த ‘சுறா’ என்ற திரைப்படம் வெளி வந்து கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதியோடு 10 ஆண்டுகளை நிறைவு செய்தது. ஆகையால் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ‘#10YearsOfSura’ என்ற ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்து வந்தனர் விஜய்யின் ரசிகர்கள். இருப்பினும் இந்த திரைப்படம் விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற எஸ் பி ராஜ்குமார் பேசுகையில், எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். ஆனால், அவருடைய 50-வது படமாக ஒரு ஃப்ளாப் படத்தை கொடுத்து விட்டோமே என்று எனக்கு மிகப் பெரிய வருத்தம் இருக்கிறது.ஆனாலும் இப்போ வரைக்கும் விஜய் சார் என்னை கூப்பிட்டு ஒரு தப்பும் சொன்னதில்லை. ஒரு வேளை படம் ஹிட்டாகியிருந்தால், என்னுடைய ஃலைப் மாறியிருக்கும். மற்ற பெரிய நடிகர்களை வைத்தும் படம் இயக்கியிருப்பேன்.

இப்படத்தின் பாடல் காட்சியின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ஒரு முறை அஜித் சார் வந்திருந்தார். அப்போது விஜய் சார், என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு, என்னிடம் பல நல்ல கதைகள் இருப்பதாக கூறினார். எனக்கும் அஜித் சாரை வைத்து படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், ‘சுறா’வின் தோல்வி என் கனவை கலைத்து விட்டது. ஆகையால், பெரிய நடிகர்களுக்கு நான் கதையே சொல்வது இல்லை. அவர்கள் என்ன பற்றி என்ன நினைப்பார்கள் என்று எனக்கு தெரியும். அடுத்ததாக நான் எடுக்கப்போகும் ஒரு படத்தில் ஆர்.கே சார் நடிக்கப்போகிறார்” என்று இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் தெரிவித்திருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement