பாலாஜி குறும்படம்.! ஐஸ்வர்யா ராணி.! பாதுகாவலன் டேனி.! பிக் பாஸ் சித்து விளையாட்டு

0
673
Bigg-Boss
- Advertisement -

நடிகை ஐஸ்வர்யாவிற்கும் , நடிகர் பாலாஜிக்கு ஏற்பட்ட மோதல் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய(ஜூலை 30) ஹைலைட்டாக இருந்து வருகிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவியாக நடிகை ஐஸ்வர்யா தான் இருந்து வருகிறார். இதனால் அவர் செய்யும் அதிகாரம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

-விளம்பரம்-

Balaji

- Advertisement -

நேற்று (ஜூலை 30) நடிகர் பாலாஜியிடம், நான் தலைவியாக இருக்கும் போது கெட்டவார்த்தை பேச கூடாது என்று ஐஸ்வர்யா கூற அது சற்று வாக்குவாதமாக மாறி விடுகிறது. இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யா பாலாஜி மீது குப்பைகளை கொட்டுகிறார். அதற்கு பாலாஜி எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த ப்ரோமோ விடியோவில் ஐஸ்வர்யா பாலாஜி மீது குப்பை கொட்டும் போது அனைவரும் அவரை ‘வேண்டாம் ராணி’ என்று கூறுகின்றனர். இதை வைத்து பார்க்கும் போது அவருக்கு இந்த வாரம் எதாவது டாஸ்க் அல்லது சக்தி கொடுக்கப்பட்டுள்ளதா என்று தோன்றுகிறது. அதே போல இந்த ப்ரோமோவின் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா, ஜனனி, டேனி ஆகியோர் ஒரு அறையில் அமர்ந்து பாலாஜி பேசுவதை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-

Aishwarya

ஐஸ்வர்யா பற்றி பாலாஜி ஏதோ சொல்கிறார், அதை கேட்ட ஐஸ்வர்யா கோபத்துடன் ‘வெச்சி செய்ய போறேன்’ என்று ஆத்திரமுடன் கூறுகிறார். அதன் பின்னர் தான் ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பை கொட்டும் காட்சி வருகிறது. அதில் ஷாரிக் , ஐஸ்வர்யாவை தடுக்க செல்கிறார் அப்போது காவலர் உடையில் கையில் லத்தியுடன் இருக்கும் டேனி ஷாரிக்கை தடுக்கிறார். இதன் மூலம் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராணியாகவும், டேனி அவரது பாதுகாவலராகவும் இருப்பது போல டாஸ்க் அளிக்கப்பட்டுள்ளதா என்று எண்ணம் தோன்றுகிறது.எது எப்படியோ, டாஸ்க் என்ற பெயரில் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் ஐஸ்வர்யா.

Advertisement