பார்க்க மறுத்த முதலமைசச்சர்.! விஜய்யின் படத்துக்கு முக்கிய அறிக்கை வெளியிட்ட கருணாநிதி!

0
1066
vijay
- Advertisement -

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான கருணாநிதி உடல் நல குறைபட்டால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தான் கடந்த 4 நாட்களாக தமிழகத்தின் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. கலைஞர் அவர்களுக்கும் தமிழ் சினிமாவிற்கும் ஒரு ஆழமான பந்தம் இருக்கிறது.

-விளம்பரம்-
karunanithi
karunanithi

கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற நல திட்டங்களை செய்துள்ளார். அதே போல நடிகர் விஜயின் வாழ்க்கையிலும் கலைஞர் அவர்களின் ஒரு மறக்க முடியாதா உதவியை செய்திருக்கிறார். விஜய் படங்கள் என்றாலே சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்து வருகிறது.

- Advertisement -

விஜய் படத்திற்கு முதன் முதலில் எதிர்ப்பு கிளம்பியது 2013 ஆம் ஆண்டு வெளியான ‘தலைவா’ படத்திற்கு தான். இந்த படம் வெளியாகும் முன்னர் பல்வேறு அரசியல் குறுக்கீடுகளை சந்தித்தது. அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தின் தலைப்பின் கீழ் ‘time to lead ‘ என்ற வாசகம் இடம்பெற்று தான். இந்த காரணத்தினால் இந்த படம் அரசியில் கலந்த படமாக இருக்கும் என்று பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.

thalaiva

-விளம்பரம்-

அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களை பல முறை சந்தித்து இந்த படத்தை எப்படியோ வெளியிடவைத்தார் நடிகர் விஜய். நடிகர் விஜய் இந்த படத்தின் பிரச்சனைக்காக அலைந்து கொண்டிருந்த போது கலைஞர் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தம்பி விஜய் அவர்களின் ‘தலைவா’ படம் அரசியல் சம்மந்தபட்ட படம் அல்ல, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

அவரது படத்தை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். மேலும், இந்த படத்தில் தம்பி விஜய் அரசை தாக்குவது போல வசனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.அவரது படம் விரைவில் வெளியாக வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement