தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி பல துறைகளில் பங்காற்றி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து உள்ளார்.சமீபத்தில் வந்த கனா படம் கூட இவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்தது.
எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முகத்தில் மாஸ்க் அணிந்தவாறு இருக்கும் ஒரு போட்டவுடன் பகிர்ந்திருந்தார். அதில் நீங்கள் பயணம் மேற்கொண்டால் தயவுசெய்து இதுபோன்ற ஒரு மாஸ்க்கை உங்கள் பாதுகாப்பிற்காக அணிந்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை கண்ட பலர் ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்த்துக்கள் தெரிவித்தாலும், ஒரு சிலர் சைனா போறியா என்று கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ் . உலகம் முழுவதும் உள்ள 24 நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று உள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் மக்கள் அனைவரும் பயங்கர பீதியில் உள்ளார்கள். சீனா மற்றும் உலக நாடுகளில் தற்போது இந்த கரோனா வைரஸ் தாக்குதலினால் மூவாயிரத்துக்கும் மேல் உயிரிழந்து உள்ளார்கள்.
இந்தியாவில் கேரள மாநிலத்தில் மூன்று பேருக்கு இந்த கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் தற்போது இரண்டு பேர் இந்த கரோனா வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது இத்தாலியில் இருந்து டெல்லிக்கு திரும்பிய ஒருவரும், தெலுங்கானாவை சேர்ந்த ஒருவருக்கும் இந்த கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இது பரிசோதனையில் உறுதி ஆகி தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த வைரஸ் இந்தியாவில் பரவி இருப்பதை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.