அடுத்த ஒரு flop ரெடி – தன் அடுத்த படத்தை கேலி செய்த Haterக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதிலடி.

0
374
- Advertisement -

எதிர்மறையான கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஐஷ்வர்யா ராஜேஷ் போட்டுள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் நடன கலைஞர், தொகுப்பாளினி என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் கனா படம் தான் இவருக்கு நல்ல பெயர் ஏற்படுத்தி தந்தது. மேலும், இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார். தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் .

- Advertisement -

டிரைவர் ஜமுனா:

இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் மூலம் ஐஸ்வர்யா பிரபலமான நடிகையாக திகழ்கிறார். மேலும், சமீப காலமாக இவர் பெண் முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் “டிரைவர் ஜமுனா” என்ற படத்தில் நடித்திருக்கிறார். வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் 18 ரீல்ஸ் நிறுவனத்தின் எஸ்பி சௌத்ரி தயாரித்திருக்கின்றனர்.

இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணா பிக் பாஸ் மணிகண்டன், ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி போன்றவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்சி டிரைவராக நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

சொப்பன சுந்தரி படம் :

இதனை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி நடித்த “ரன் பேபி ரன்” என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். ஆனால் அது ஒரு சிறிய கதாபாத்திரம் தான. அந்த கதாபாத்திரத்திற்க்காக ஐஸ்வர்யா ராஜேஷை கடுமையாக நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் விமர்சித்து பதிவிட்டு வந்தனர். அதனை தொடர்ந்து தற்போது “சொப்பன சுந்தரி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எஸ்.எஸ்.சார்லஸ் இயக்குகிறார். மேலும் லட்சுமி பிரியா, மீமீ கோபி, கருணாகரன், ரெட்டின் கிங்ஸ்லீ, ஷாரா, சுனில் ரெட்டி என பலரும் நடித்திருக்கின்றார். இந்நிலையில் தான் இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா கடந்த 2ஆம் தேதி நடந்தது.

இசைவெளியிட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் :

இந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில் “படத்தில் கதாநாயகிகளுக்கு பலமே இயக்குனர் தான். கனா மற்றும் க/பெ ரணசிங்கம் போன்ற படங்ககளில் நட்சத்திர அந்தஸ்தை பெறுவதர்க்கு காரணம் இயக்குனர் தான். ஏனெற்றால் ஒரு இயக்குனரால் தான் படத்தில் கதாயாகிகளை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்த முடியும். அந்த வகையில் எனக்கு இயக்குனர் முக்கியம். இந்த படத்தில் இயக்குனர் சார்லஸ் முதலில் என்னை வைத்து படம் இயக்க மாட்டேன் என்று கோபத்துடன் கூறினார்.

கோபத்தால் பலவற்றை இழந்திருக்கிறேன் :

அதன் பிறகு அவரை நான் தொடர்பு கொண்டு பேசிய பின்னர் படத்தை இயக்க சம்மதித்தார், அவரது கோபம் அவ்வளவு தான். கோபத்தால் எந்த நல்லதும் வராது. நான் என்னுடைய வாழ்க்கையில் நிறைய முறை கோவப்பட்டு அதனால் பலவற்றை இழந்திருக்கிறேன். எனவே இப்படத்தின் கதையை பற்றி விவாதித்தோம் நல்ல முடிவு கிடைத்து. கண்டிப்பாக இயக்குனர் சார்லஸ் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக வருவார். அவர் யாரையும் காத்திருக்க வைக்க மாட்டார். அணைத்து கலைஞர்களையும் சரியான பயன்படுத்திக்கொள்வார் என்றார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

பாராட்டும் நெட்டிசன்கள் :

இந்நிலையில் இந்த இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்வதற்கு முன்னர் போஸ்ட்டர் வெளியாகிய போது நெட்சன்கள் சிலர் அடுத்த படம் தோல்வியை நோக்கி செண்டு கொண்டிருக்கிறது என்று பதிவிட்டிருந்தார். இப்படியொரு நிலையில் இந்த பதிவிற்கு பதிலளித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிரித்த முகத்தின் எமோஜிகளை பதிவிட்டிருந்தார். அந்த பதிவு வைரலானதை அடுத்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த அணுகுமுறையை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement