இந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.! அவரே சொன்ன காரணம் இது தான்.!

0
854
indian-2
- Advertisement -

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த “இந்தியன் ” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டவது பாகம் தற்போது மும்மரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் சுஸி பே, முதல் பாகத்தில் நடித்த நெடுமுடி வேணு, ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்துவருகிறது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க பிரபல இந்தி ஹீரோவும் நடிகை கஜோலின் கணவருமான அஜய்தேவ்கனிடம் பேசினர். அவர் நடிகக் மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இதுபற்றி அஜய்தேவ்கனிடம் கேட்டபோது, தன்னிடம் நடிக்க கேட்டது உண்மைதான் என்றார்.

ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ’இந்தியன் 2’ படத்துக்கு உடனடியாக கால்ஷீட் வேண்டும் என்று கேட்டனர். தற்போது வேறு படங்களில் நடித்துவருவதால் உடனடியாக என்னால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. நெகட்டிவ் கேரக்டர் என்பதால் நடிக்கவில்லை என்று கூறப்படுவதை ஏற்கமாட்டேன். நான் இந்தியில், காக்கி, கம்பெனி படங்களில் வில்லனாக நடித்திருக்கிறேன். அதோடு, ’இந்தியன் 2’ படத் தில் என்ன கேரக்டரில் நடிக்க என்னை அழைத்தார்கள் என்பதை வெளிப்படுத்தும் எண்ணமில்லை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement