கைதி படத்தின் இந்தி ரீ – மேக்கை நடித்து இயக்கப்போகும் அஜய் தேவ்கான் – இந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிகையாம் (விளங்கிடும்)

0
355
ajay
- Advertisement -

சமீப காலமாகவே தமிழில் வெளியான பல படங்களில் மற்ற மொழிகளிலும் ரீ மேக் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியில் பல தமிழ் படங்கள் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படம் “கைதி”. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் அவர்கள் இசை அமைத்து இருந்தார். மேலும், இந்த படத்தில் சித்திரம் பேசுதடி நரேன், பொன்வண்ணன், மகாநதி சங்கர், ஆகியோர் நடித்து இருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்ஷன், திரில்லர் படம். சிறை வாழ்க்கையை அனுபவித்த ஒரு மனிதனின் கதையை எடுத்துச் சொல்லும் படம் தான் கைதி. கைதி படத்தில் ஹீரோயின், பாடல்கள் எதுவும் இல்லாத கதைக்களமாக உருவாக்கி இருந்தார் இயக்குனர்.

- Advertisement -

கைதி இந்தி ரீ மேக் :

விஜய்யின் பிகில் படத்திற்கு போட்டியாக கைதி படம் திரை அரங்கிற்கு வந்தது. கைதி படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கைதி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த படம் உலக அளவில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்று தந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் தற்போது இந்தியில் இந்தப் படத்தை ரீமேக் செய்வதாக அறிவித்துள்ளனர்.

படத்தை இயக்கும் அஜய் தேவ்கன் :

இந்த படத்தில் கார்த்திக் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு போலா என்ற தலைப்பை வைத்து இருக்கின்றனர். இதற்கு முன்னதாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கான் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் பல பாலிவுட் நடிகர்கள் கைதி படத்தை பார்த்து உள்ளார்கள். இதனால் பாலிவுட்டில் இந்த படத்தில் நடிப்பதற்காக சில போட்டிகளும் இருந்து வந்தது.

-விளம்பரம்-

நரேன் ரோலில் தபு :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் அதிரடி மாற்றம் ஒன்றை செய்ய விருக்கின்றனர். அதாவது இந்த படத்தில் நரேன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகை தபு நடிக்க இருக்கிறாராம். பொதுவாக ஒரு மொழயில் இருந்து மற்ற மொழிக்கு ரீ-மேக் செய்யப்படும் படங்களில் ஒரு சில மாற்றங்களை செய்து வெளியிடுவது வாடிக்கையான ஒரு விஷயம் தான். ஆனால், கைதி படத்தில் நாயகியை சேர்த்தால் படத்தின் ஒரிஜினல் வெர்ஷனை கெடுத்தது போல இருக்கும் என்பதே பலரின் கருத்து.

ஜிகிர்தாண்டா படத்தில் செய்த மாற்றம் :

அதே போல கைதி படத்தில் நரேன் கதாபாத்திரம் ஹீரோவுடன் படம் முழுதும் பயணிக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தில் ஒரு நடிகை நடிப்பது படத்தின் ஒரிஜினாலிட்டி போய்விடும் என்று பலரும் கூறி வருகின்றனர். ஏற்கனவே ஜிகர்தண்டா படத்தின் இந்தி ரீ- மேக்கில் சித்தாரத்துக்கும் பதிலாக கிரிட்டி சோனன் நடித்து இருந்தார். ஆனால், எதிர்பார்த்தபடி இந்த படம் ஓடவில்லை.

Advertisement