உத்தம வில்லன் படத்தின் தோல்விக்கு கமல் தான் காரணம் என்று எழுந்த சர்ச்சைக்கு இயக்குனர் லிங்குசாமி அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சினிமா உலகில் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உலக நாயகனாக அவதாரம் எடுத்து இருக்கிறார். மேலும், இவர் இந்தியத் திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னனிப் பாடகர், நடன அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர்.
இவர் சினிமா திரை உலகில் தன்னுடை ய கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார். இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகளவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள். இறுதியாக கமல் நடிப்பில் வெளியாகி இருந்த ‘விக்ரம்’ படம் மாபெரும் வெற்றியடைந்தது. மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால், சில படங்கள் தோல்வியும் சந்தித்து இருக்கிறது.
உத்தம வில்லன் படம்:
அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகி இருந்த படம் உத்தம வில்லன். இந்த படத்தின் கதை, திரைக்கதையை கமலும், கிரேசி மோகன் இணைந்து எழுதி இருந்தார்கள். ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்தார். இந்த படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் கமல் உடன் பூஜா குமார், ஊர்வசி, கே. பாலச்சந்தர், நாசர், ஆண்ட்ரியா, ஜெயராம், பார்வதி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
லிங்குசாமி அளித்த பேட்டி:
இந்தப் படத்தில் கமலுடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டிருந்தாலும், விமர்சன ரீதியாக படம் தோல்வியை தான் சந்தித்து இருந்தது. இந்த படத்திற்குப் பிறகு இயக்குனர் லிங்குசாமி பல பிரச்சினைகளை சந்தித்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. அது மட்டும் இல்லாமல் உத்தம வில்லன் படத்தின் தோல்வியால் தான் லிங்குசாமி கடனில் சிக்கி தவித்ததாகவும் கூறியிருந்தார்கள். கமலின் படத்தினால் பிளாக் பஸ்டர் இயக்குனர் லிங்குசாமி உடைய வாழ்க்கையே மாறிப்போனது என்றெல்லாம் தகவல் வெளியாகி இருந்தது.
உத்தம வில்லன் தோல்விக்கு காரணம்:
இது குறித்து கோலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசி இருந்தார்கள். இந்த நிலையில் முதன்முதலாக உத்தமவில்லலின் தோல்வி குறித்து இயக்குனர் லிங்குசாமி பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், எங்க நிறுவனம் இப்படி ஆனதுக்கு கமல் எனும் மகா கலைஞன் மீது பழி போடாதீர்கள். அவர் கூட படம் பண்ணதே எங்களுக்கு பெரிய விஷயம். என் நிலை மாற உத்தம வில்லன் காரணம் என்று நான் சொல்லவே மாட்டேன். அப்படி ஒரு வார்த்தை என்னோட வாயில் இருந்து வராது.
கமலை வைத்து இயக்கும் படம்:
திரும்ப ஒரு படம் பண்ணுவோம் என்று சார் சொல்லியிருக்காரு. அந்த மேஜிக் கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனந்தம் படத்தை இயக்கிய போதே ’மதி’ என்று கமல் சாருக்காக ஒரு கதையை தயார் செய்தேன். அப்போது அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது மீண்டும் அந்த கதையை ரீவொர்க் செய்கிறேன். கண்டிப்பாக கமல் சாருக்கு பிடிக்கும் என்று கூறி இருந்தார்.