அஜித் சொன்ன அந்த ஒரு வார்த்தை.! இன்று வரை கடைபிடிக்கும் சிவகார்த்திகேயன்.!

0
422
Ajith

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதல்ல. தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் “சீமராஜா” திரைப்படம் நேற்று (செப்டம்பர் 13) வெளியானது.

sivakarthikeyan

எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என்றாலும் மிகவும் சுமார் என்ற விமர்சனத்தை பெற்று வருகிறது “சீமராஜா”. மேலும், இந்த படத்தில் நிறைய இடங்களில் அஜித் ரெபரென்ஸ்ஸை பயன்படுத்தியுள்ளனர். காமெடி நடிகர் சூரிக்கு கூட அஜித்தின் “வீரம்” படத்தின் தீம் முயூசிக்கை பயன்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில் அஜித் குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், நான் அஜித் சாரை சந்திக்கும் போதெல்லாம் ஒரு எனர்ஜி கிடைக்கும், அவரை அடிக்கடி சந்திக்க மாட்டேன்.ஆனால், அஜித் சாரை சந்திக்கும் போதெல்லாம் எனக்கு பல அறிவுரைகளை வழங்குவார்.

thalaajith

அவர் அறிவுரை கூறும் போது கண்டிப்பாக வருமான வரியை ஒழுங்காக கட்டிவிடு என்று கூறுவர். அவர் சொன்னதிலிருந்து நான் என்னுடைய வரியை ஒழுங்காக கட்டி வருகிறேன் என்று சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.