விஜய்க்கு இப்படி ஒரு மாசா..? அதிர்ந்த பாண்டிச்சேரி.! எந்த நடிகருக்கும் இப்படி ஒரு வரவேற்பு கிடைக்காது

0
484
vijay

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்ட ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். தனது ரசிகர்களுக்கு எதையும் செய்யும் விஜய் தற்போது ரசிகர் ஒருவரின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க பாண்டிச்சேரி கிளம்பியுள்ளார்.

- Advertisement -

நடிகர் விஜய் எதற்காக பாண்டிசேரி போகிறார் என்று விசாரித்த போது விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தின் செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் என்பவரின் மகள் திருமணத்திற்காக தான் பாண்டிச்சேரிக்கு சென்றுள்ளார் நடிகர் விஜய்.

இந்த திருமணத்தில் கலந்துகொள்வதற்காக நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்றம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் அன்பு கோரிக்கையை ஏற்று நடிகர் விஜய் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் மகள் திருமணத்திற்கு சென்றுள்ளார்.

-விளம்பரம்-

விஜய்யின் வருகையை ஒட்டி பாண்டிச்சேரியில் இருக்கும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திழைத்துள்ளார். மேலும், விஜய்யை வரவேற்கும் வகையில் பாண்டிச்சேரி பகுதி முழுக்க பேனர்களை வைத்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.

Advertisement