அடுத்த தல படத்தில் இந்த மாதிரி எந்த விஷயமும் நிச்சயம் இருக்காது – விஷ்ணுவர்தன் உறுதி

0
1106
ajith-vishnuvaradhan
- Advertisement -

இந்த கால தமிழ் சினிமாவின் இயக்குனர் பக்கத்தில் விஸ்ணுவர்த்தனுக்கு ஒரு நல்ல இடம் உண்டு. அப்படி பல நல்ல படங்களை கொடுத்திருக்கிறார் விஷ்ணு. அதிலும் 2007ஆம் ஆண்டு தல’யை வைத்து எடுத்த பில்லா, அவரது சினிமா வாழ்கையில் ஒரு சிறந்த படமாக அமைந்தது.
ajith - vishnuvaradhanநாளையுடன் பில்லா வெளியாகி 10 வருடம் ஆகிறது. இது குறித்து ரசிகர்கள் சமீபத்தில் அவரிடம் கேள்வி கேட்டனர். அடுத்த படத்தில் தல’யை வித்தியாசமாக காட்டுங்கள் எனவும் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த விஸ்ணுவர்த்தன், ஆம் இனிமேல் அவரை வைத்து படம் எடுத்தால் கண்டிப்பாக சால்ட் அண்ட் பெப்பர் கிடையாது. அவர் ஒரு ஜாலியான மனிதர் அவரை வைத்து ஒரு கலர்புல் படம் எடுக்க வேண்டும் எனக் கூறினார் இயக்குனர் விஷ்ணுவரத்தன்.

Advertisement