தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் குமார். தற்போது தல அஜித்தின் “வலிமை” படம் குறித்து ஒரு செமயான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் தல ரசிகர்கள் எல்லாம் மிகுந்த கவலையில் உள்ளார்கள். இந்த வருடம் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள்.
இந்த படத்தின் பணிகள் எப்போதோ நிறைவடைந்த நிலையில் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் அஜித் சைக்கிளில் பயணம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதே போல ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் பல மாதங்களுக்கு முன் வைரலானது. அதில் தல அஜித் அவர்கள் வலிமை படத்தின் சூட்டிங்கிற்காக சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு சைக்கிளிலேயே சென்று இருக்கிறார் எனவும், அதுவும் 600 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து கொண்டே சென்று இருக்கிறார் என்றும் கூறிவந்தனர் .
அதோடு தல அஜித் அவர்கள் சைக்கிள் ஓட்டும் மாதிரி புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவந்தனர் . இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது . இது உண்மையா? பொய்யா? என்று ஆராய்ந்த போது இந்த புகைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது வலிமை படத்திற்கு முன்னரே எடுக்க பட்டது என்று நமக்கு தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான். எனவே, முன்பு வெளியான செய்தியை போல நடிகர் அஜித் உனக்குயில் 600 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து கொண்டே சென்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், இந்த புகைப்படத்தில் அஜித் கொல்கத்தா 924 கிலோ மீட்டர் என்ற மையில் கல்லின் மேல் அமர்ந்து இருக்கிறார். எனவே, இதுவும் சென்னை டு ஹைதராபாத் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பது உறுதியாகியுள்ளது.