அஜித் மகளின் 12 வது பிறந்தநாள்.! ரசிகர்கள் செய்த செயல்.! குவிவும் பாராட்டு.!

0
2084
Ajith-Daughter
- Advertisement -

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக விளங்கி வருபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார். தற்போது சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்துள்ள அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் 10 ஆம் தேதி வெளியாக இறுகியது.

-விளம்பரம்-

பொதுவாக வெளியே வரும் போது அவ்வளவாக அலட்டி கொள்ளாத அல்டிமேட் ஸ்டார் என்னதான் ஷூட்டிங்கில் பிஸி ஆக இருந்தாலும் தனது மகன் மற்றும் மகள் அனோஷ்கா அவர்களுக்கு நேரம் ஒதுக்கவதில் மிகுந்த அக்கறை கொள்வார்.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்னர் தனது மகளின் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தான் நடித்து கொண்டிருக்கும் ‘விசுவாசம்’ பட கெட்டபில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.

இந்நிலையில் அஜித் மகள் அனோஷ்கா தனது 12 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
டிவிட்டரில் #HBDAnoushkaAjith என்ற ஹாஷ்டாக் மூலம் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆங்காங்கே பேனர்களை அமைத்து வாழ்த்து தெரிவித்துவருவதோடு சில நல திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement