அஜித் ரசிகர்கள் மீது சரமாரியாக லத்தி அடி நடத்திய போலீஸ்.! வீடியோ இதோ.!

0
473
Ajith
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித்திற்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். இவருக்கு இருக்கும் மாஸ் பற்றி அடிக்கடி அவரது ரசிகர்கள் நிரூபித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இந்த நிலையில் கலை நிகழ்ச்சியின் போது விஸ்வாசம் பாடலுக்கு நடனமாடிய அஜித் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

-விளம்பரம்-

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகை அன்று வெளியாகி தற்போது வரை வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக ‘அடிச்சுதூக்கி’ பாடல் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : படப்பிடிப்பை காண சென்ற ரசிகர்களுக்கு அடி உதை.! இரண்டு பேர் காயம்.!

- Advertisement -

சமீபத்தில் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கிராமத்தில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற ‘அடிச்சு தூக்கு’ பாடல் மேடையில் ஒளிபரப்பானது. அப்போது பார்வையாளர்கள் பக்கத்தில் இருந்த சிலர் அந்த பாடலுக்கு நடனம் ஆடினர். உடனே அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் நடனமாடிய அனைவர்மீதும் கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவத்தால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Advertisement