என்னை விமான அதிகாரி தனியாக அழைத்தார்.!விமான நிலையத்தில் சங்கடத்தை அனுபவித்த காஜல்.!

0
450
kajal-agarwal

தமிழ் சினிமாவில் #metoo என்ற விஷயம் வந்த பிறகு எண்ணற்ற நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து மிகவும் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய நடிகையான காஜல் அகர்வால் விமான நிலையத்தில் அவர் சந்தித்த சங்கடத்தை பற்றி பேசியுள்ள.

தமிழில் பரத் நடித்த ‘பழனி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காஜல். அதன் பின்னர் விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடனமும் நடித்து விட்டார் தற்போது கமலுடன் ‘இந்தியன் 2 ‘ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற காஜல் சமீபத்தில் வெளிநாடு சென்று விட்டு விமான நிலையம் வந்த போது அங்கு நடந்த சங்கடம் குறித்து பேசியுள்ளார். அதில்,
ஒருநாள் காலையில் அந்த விமான நிலைய கவுண்டருக்கு சென்றதும், அங்கிருந்த பெண் ஒருவர் என்னை தேவையில்லாமல் அலைக்கழித்தார். நான் சீக்கிரமாகவே அங்கு சென்றிருந்தாலும் எனக்கு தேவையில்லாத சங்கடங்களை அங்கிருந்தவர்கள் கொடுத்தனர்.

மேலும் விமானத்துக்கு செல்ல வேண்டிய நுழைவாயிலையும் மூடி இருந்தனர். இதனால் நான் ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்தேன். இதை நான் விமான நிர்வாகத்திடம் கூறிய போது, என்னை தனியாக அழைத்து பேச முயற்சித்தனர். ஆனால் நான் அவர்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை என கூறினார்.