விஜய் பிறந்தநாளில் ட்ரெண்டாகும் அஜித்தின் ஹேஷ் டேக் – அஜித்தின் Prகள் செய்யும் வேலையா ? கிளப்பிவிட்ட ப்ளூ சட்டை.

0
195
- Advertisement -

விஜய்யின் மாசை குறைக்க ரசிகர்கள் செய்த வேலையை குறித்து ப்ளூ சட்டை மாறன் போட்டு இருக்கும் டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் தான் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள்.

-விளம்பரம்-

அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும். ஆரம்ப காலத்தில் இவர்கள் இருவரும் ராஜாவின் பார்வையில் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அதன் பின்னர் இவர்கள் இருவரும் எந்த படத்திலேயும் சேர்ந்து நடிக்க வில்லை. தற்போது இருவருமே படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

பீஸ்ட் படம்:

மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி படம் வெளியிடப்பட்டு இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இவர் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார்.

தளபதி 66 படம் :

மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணி புரிந்து இருக்கிறார்கள். மேலும், விஜய்யின் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ‘வாரிசு’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான போஸ்டர் எல்லாம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

அஜித்தின் ஹாஸ்டேக்:

இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்நிலையில் நேற்று தளபதி விஜயின் பிறந்தநாள். இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் தல அஜித்தின் புகைப்படத்தை மூன்று நாட்களாக சோசியல் மீடியாவில் ‘என்றும் தல அஜித்’ என்று ஹாஸ்டேக் போட்டு ரசிகர்கள் வைரலாகி வருகிறார்கள்.

விஜய்யின் மாசை குறைக்க ரசிகர்கள் செய்த வேலை:

அஜித் அவர்கள் வெளிநாட்டிற்கு பைக்கில் பயணம் செய்திருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படத்தை தான் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். அதோடு அஜித் எந்த ஒரு சோசியல் மீடியாவிலும் இல்லை. இப்படி இருந்தும் அஜித்தின் புகைப்படத்தை வைரலாக்கியதற்கு காரணம் விஜய்யின் பிறந்தநாளில் மாசை குறைப்பது தான் என்று கூறப்படுகிறது. இதை ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.

Advertisement