பிரபல நடிகர் அஜித் அவர்களுக்கு பத்ம பூஷண் விருது அறிவித்திருக்கும் நிலையில் அவரைக் குறித்த செய்திகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90s காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது கடுமையான உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டிருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது.

தற்போது இவர் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் முதலில் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போனது. தற்போது இப்படம் வருகின்ற பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் 800 தியேட்டர்களில் ஜெயண்ட் திட்டமிட்டுள்ளது. தற்போது கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்தி வருவதாற்காக அஜித்குமாருக்கு மத்திய அரசால் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அஜித்தின் முக்கியமான படம்:
இந்நிலையில் அவரது வாழ்க்கையில், அவர் எடுத்த முக்கிய முடிவு குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. அதாவது நடிகர் அஜித்குமாரின் கேரியரில் மிக முக்கியமான திரைப்படம் ஆக அமைந்தது 'மங்காத்தா'. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இப்படம் அவரின் கேரியரில் மட்டுமில்லாமல், அஜித்தின் சினிமா வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தில் முழுக்க, முழுக்க வில்லனாக நடித்த அஜித்தின் நடிப்பை அனைவரும் பாராட்டி இருந்தார்கள்.

நரையுடன் தோன்றிய அஜித்:
இந்தப் படத்தில் அஜித் எடுத்த முக்கியமான முடிவு ஒன்று, வெள்ளை நரையுடன் தோன்றுவது தான். இந்த முடிவு கொஞ்சம் தவறாக போனாலும் ரசிகர்கள் கிழவன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும், அந்த முடிவை தைரியமாக எடுத்தார் அஜித் குமார். அந்த முடிவை அவர் எடுத்ததற்கான காரணத்தை கடந்த 11 வருடங்களுக்கு முன்னதாக பிரபல தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டது. அதாவது வெள்ளை நரையுடன் தோன்றுவதற்கான காரணத்தை அஜித்திடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், நான் வேலைக்கு வந்து கிட்டத்தட்ட 26 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
அஜித் சொன்ன காரணம்:
நான் எனது 16 வயதில் என்னுடைய முதல் வேலையை தொடங்கினேன். இந்த 26 வருடத்திற்கு மேலான வாழ்க்கையில் நான் எத்தனையோ தோல்விகளை சந்தித்து இருக்கிறேன். எத்தனையோ வெற்றிகளை சந்தித்து இருக்கிறேன். எத்தனையோ அவமானங்களையும் சந்தித்து இருக்கிறேன். என் வாழ்க்கையில் எத்தனையோ நம்பிக்கை துரோகங்களை சந்தித்து இருக்கிறேன். அதையெல்லாம் கடந்து வந்தது தான் இந்த வெள்ளை நரை, இதை நான் யாரிடமும் மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று கூறியிருக்கிறார்.

அஜித் கார் ரேசிங்:
நடிகர் அஜித் நடிப்பை தாண்டி கார் ரேசிங் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பது நாம் அறிந்ததே. இவர் சினிமாவில் நுழையும்போது இருந்தே கார் ரேஸ்ங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக பைக் அல்லது கார் ஓட்டும் காட்சிகள் கண்டிப்பாக இடம் பெற்றுவிடும். சமீபத்தில் கூட துபாயில் நடந்த '24H' கார் பந்தயத்தில், 991 பிரிவில் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது என்பது குற்றத்தக்கது.






