பல ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்த அஜித்- வைரலாகும் புகைப்படம்

0
64
- Advertisement -

பல வருடம் கழித்து சூப்பர் ஸ்டாரை அஜித் நேரில் சந்தித்திருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். கடைசியாக அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற படத்தில் நடித்து இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து விட்டது.

-விளம்பரம்-

தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். ஏற்கனவே அஜித்- திரிஷா இருவரும் இணைந்து ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் விடாமுயற்சி படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

- Advertisement -

விடாமுயற்சி படம்:

இவர்களுடன் இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் தத், ஆரவ், உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இதுவரை 80% படப்பிடிப்பு முடிந்து விட்டது. இதை அடுத்து அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்கிறார். இது அஜித்தின் 63வது படமாகும். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார். இதற்கான அறிவிப்புகள் எல்லாம் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இவர் ஏற்கனவே திரிஷா இல்லனா நயன்தாரா, பகிரா, மார்க் ஆண்டனி போன்ற படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர்.

Good Bad Ugly படம்:

இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.
அதோடு மே 10 ஆம் தேதி தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. எந்த ஒரு அறிவிப்புமே இல்லாமல் 20-ஆம் தேதி படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. இது மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆகியிருந்தது.

-விளம்பரம்-

சிரஞ்சீவி-அஜித் புகைப்படம்:

இந்த படத்திற்கான பிரம்மாண்டமாக செட்டை ஒரு வாரத்திற்குள் போட்டு படத்தின் வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரை அஜித் சந்தித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, குட் பேட் அட்லி படத்தினுடைய படப்பிடிப்பிற்கு அருகில்தான் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவினுடைய விஸ்வம்பரா படத்தினுடைய படப்பிடிப்பும் நடந்திருக்கிறது.

சிரஞ்சீவி பதிவு:

இதை தெரிந்து கொண்ட அஜித் சிரஞ்சீவியை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்திருக்கிறார். மேலும் இது குறித்து சிரஞ்சீவி பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில், அஜித்தின் உடைய முதல் படத்தின் இசை வெளியீட்டு விழா என்னுடைய தலைமையில் தான் நடந்தது. அவருடைய மனைவி ஷாலினி என்னுடைய படத்தில் நடித்திருக்கிறார். இத்தனை வருடங்களாக தமிழ் சினிமாவில் அஜித்தினுடைய வளர்ச்சியை பார்த்து நான் சந்தோஷப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement