உடல் மெலிந்து கன்னங்கள் சுருங்கி அடையாளம் தெரியாத அளவு மாறியுள்ள அஜித்தின் தாயார் – அஜித்தின் அண்ணன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.

0
525
- Advertisement -

அஜித் அம்மாவின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தன்னுடைய கடும் உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும் அல்டிமேட் ஸ்டார் ஆக பல ஆண்டு காலமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இதனால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், அஜித் குறித்து ஏதாவது ஒரு செய்தி வந்தால் போதும் அதை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி விடுவார்கள். அந்த வகையில் சமீப காலமேகவே அஜித் தமிழனே கிடையாது. அவர் வட மாநிலத்தவர் தான் என்றெல்லாம் நெட்டிசன்கள் விமர்சித்து இருக்கிறார்கள். ஆனால், அவருடைய ரசிகர்கள் அவர் என்னவாக இருந்தாலும் அவர் எங்களுடைய தல என்றும் கொண்டாடி வருகிறார்கள். இருந்தாலும் சோசியல் மீடியாவில் அடிக்கடி அஜித்குமார் ஒரு தமிழனே கிடையாது என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டு தான் வருகிறது.

- Advertisement -

அஜித் பேட்டி வீடியோ:

இந்த நிலையில் அஜித் பேசி இருக்கும் பழைய பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அதில் அஜித்திடம் தொகுப்பாளர், உங்களுடைய பெயர் வடமொழி பெயரா? என்று கேட்டதற்கு அஜித், அஜித்குமார் என்பது வடமொழி பெயர்தான். ஆனால், நான் ஒரு தமிழன். நான் படித்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். என்னுடைய அப்பா தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான். அம்மா தான் வட மாநிலத்தில் சேர்ந்தவர்.

அஜித் பெயர் குறித்து விளக்கம்:

அஜித்குமார் என்ற நான் தமிழன் தான். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. எனக்கு சின்ன வயதில் இருந்தே படிப்பில் பெரிதாக ஆர்வம் கிடையாது. அதனால் நான் பத்தாம் வகுப்பு வரை தான் படித்தேன். சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டிய எண்ணம், வெறி எனக்கு இருக்கிறது. என்னுடைய பெயரை வைத்து நிறைய பேர் நான் தமிழன் இல்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள். நான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றால் முதலில் நான் ஒரு தமிழன் என்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

அஜித் திரைப்பயணம்:

கடைசியாக இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து தற்போது அஜித் அவர்கள் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார்.

விடாமுயற்சி படம்:

இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். இந்த படத்தில் சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக இருப்பதாகவும், சில இடங்களில் எமோஷன் காட்சிகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தினுடைய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement