ஆக்ஷன் இயக்குனர் ஹரியின் மூன்று பசங்களா இது – என்ன இப்படி வளந்துட்டாங்க.

0
1826
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் படங்களுக்கு பெயர் போனவர் இயக்குனர் ஹரி. பிரசாந்த் நடித்த தமிழ் திரைப்படம் துவங்கி சாமி 2 வரை பல்வேறு ஆக்ஷன் படங்களை இயக்கி இருக்கிறார் ஹரி. அதிலும் சிங்கம் படத்தை மூன்று பாகங்களாக எடுத்து மூன்று பாகத்தையும் ஹிட் அடிக்க வைத்தார். தற்போது தனது மச்சான் அருண் விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இயக்குனர் ஹரி, அருண் விஜய்யின் சகோதரியும் நடிகையுமான ப்ரீத்தாவை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-
Preethi-Vijay-Kumar

பழம் பெரும் சினிமா தம்பதிகளான விஜய குமார்- மஞ்சுளா விற்கு 4 பெண் மற்றும் 1 ஆண் பிள்ளைகள் இருப்பது நமக்கு தெரியும். இதில் நடிகை ப்ரீத்தா என்பவரை நம்மில் சில நபர்கள் மறந்திருக்க வாய்ப்புண்டு.ஆனால், அவரது கணவர் இயக்குனர் ஹரியை நம் அனைவருக்கும் தெரியும். நடிகை ப்ரீதா 1998 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த’சந்திப்போமா’ படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் நடித்த ‘படையப்பா’படத்திலும் ரஜினியின் இரண்டு மகளில் ஒருவராகவும் நடித்துள்ள்ளார். மேலும், தமிழ் , தெலுகு , மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : தனது முன்னாள் கணவர் ரஞ்சித்துடன் பல ஆண்டுகளுக்கு பின் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ள பிரியா ராமன்.

- Advertisement -

படங்களில் தொடர்ந்து நடுத்து வந்தாலும் இவருக்கு முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் ப்ரீதா இயக்குனர் ஹரியை 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இவர்கள் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் நடிகை ப்ரீதா.

நடிகை ப்ரீதா, அவரின் உறவினரான இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியருக்கு 3 ஆண் பிள்ளைகளும் பிறந்தனர். சமீபத்தில் தனது 3 வது மகன் ஆதியின் 10 வது பிறந்தநாள் விழா நடைபெற்றுள்ளது. அப்போது தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ப்ரீதா.

-விளம்பரம்-
Advertisement