தமிழ் சினிமாவில் உச்ச நதிச்சத்திரங்களில் ஓவராக திகழ்ந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் படங்கள் ரிலீஸ் ஆனாலே அது இந்தியா பாகிஸ்தான் போட்டி போல தான். மேலும், இவர்கள் படம் ஒன்றாக ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் அடிக்கடி இவர்கள் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அடிக்கடி மோதிக்கொண்டு தான் இருப்பார்கள். அந்த வகையில் விஜய்யை விட அஜித்தின் Pro சுரேஷ் சந்திரா ட்விட்டரில் மாஸ் காட்டி இருப்பதாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பயர் விட்டு வருகின்றனர்.
நடிகர் அஜித் கடைசியாக இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து தற்போது அஜித் அவர்கள் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்றுஅறிவிக்கப்பட்டது.
அதன் பின் அஜித்தின் இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். இந்த படத்தில் சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக இருப்பதாகவும், சில இடங்களில் எமோஷன் காட்சிகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இந்த படத்தினுடைய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தினுடைய படப்பிடிப்பு அதிகம் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று இருக்கிறது. படத்தில் பயங்கரமான ஸ்டண்ட் காட்சிகளும், சேசிங் சீன்களும் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே அஜித்தின் 63வது படம் குறித்த தகவல் சமீபத்தில் டைட்டில் போஸ்டருடன் வெளியாகி இருந்தது.
இந்த படத்தை மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசைமைக்க இருக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தின் போது உதவி இயக்குனராக பணியாற்றிய போது ஆதிக் சொன்ன கதை பிடித்துப்போக அந்த படம் தற்போது உறுதியானதாக தகவல் வெளியானது. அஜித் சமூக வலைத்தளத்தில் இல்லை என்பதால் அவரின் Pro சுரேஷ் சந்திரா தான் அஜித் குறித்த அணைத்து தகவலையும் வெளியிடுவார்.
அந்த வகையில் ‘Good Bad Ugly’ படத்தின் போஸ்டரை சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அவரின் இந்த பதிவு விஜய் தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டு இருந்த GOAT பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை விட அதிக லைக்குகளை குவித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் விஜயை மிஞ்ச அஜித்தின் PRO சுரேஷ் சந்திராவே போதும் என்று விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.