ராதாரவி நல்லவரே இல்லை, என் ஆடைக்குள் கையை விட்டு – டப்பிங் கலைஞர் சங்கீதா பகீர் குற்றச்சாட்டு.

0
158
- Advertisement -

நடிகர் ராதாரவி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை டப்பிங் கவிஞர் சங்கீதா வைத்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே டப்பிங் யூனியன் தேர்தல் குறித்து தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. டப்பிங் யூனியனுக்கு நீண்ட காலமாக தலைவராக இருந்தவர் ராதாரவி. இதனால் டப்பிங் யூனியனுக்கு தலைவர் தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவித்து இருந்தார்கள். இதில் ராதாரவியும், நீண்ட நாள் டப்பிங் யூனியன் பொறுப்புகளில் இருப்பவரும், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவருமான ராஜேந்திரனும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அனைவரும் எதிர்பார்த்த டப்பிங் யூனியன் தேர்தல் இன்று நடைபெற்றிருக்கிறது. இதில் பிரபலங்கள் பலருமே வாக்களித்து இருக்கிறார்கள். தேர்தல் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும்போது டப்பிங் கலைஞர் சங்கீதா அவர்கள் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் அவர், கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ஒருவரால் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை ஏற்பட்டு இருந்தது. இது 2017 ஆம் ஆண்டு நடந்தது. இது குறித்து அப்போது டப்பிங் யூனியன் செயலாளரிடம் நான் புகார் அளித்திருந்தேன்.

- Advertisement -

டப்பிங் கலைஞர் சங்கீதா பேட்டி:

பின் அவர் எனக்கு போன் செய்து, நான் அந்த நபரிடம் பேசி விட்டேன். இனி அவர்கள் உங்களை டப்பிங்கிற்கு அழைக்க மாட்டார்கள். நீங்களும் போகாதீர்கள் என்று சொன்னார். உடனே நான், புகார் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இப்படி சொல்கிறீர்களே என்றேன். அதற்கு அவர், நீங்கள் சட்டரீதியாக சென்றால் நான் உங்களை யூனியிலிருந்து நீக்குவேன் என்றெல்லாம் மிரட்டி இருந்தார். பிறகு டப்பிங் யூனியிலிருந்து சின்மயி வெளியேற்றிய போது சின்மயி உட்பட சில பேர் சேர்ந்து குழு ஆரம்பித்தோம். அதன் சார்பில் நான் ராதாரவி எதிர்த்து டப்பிங் யூனியன் சங்கத் தேர்தலில் போட்டியிட்டேன்.

ராதாரவி செய்த செயல்:

அப்போது டப்பிங் யூனியனில் ஒரு மீட்டிங் நடந்தது. அதற்கு நான் சென்றிருந்தேன். அப்போது ராதாரவி என்னை அடிங்க என்று சொன்னார். பின் அந்த டப்பிங் யூனியனின் செயலாளரின் தங்கை கவிதா என்னை அசிங்கமாக பேசி என் ஆடைக்குள் கையை விட்டு நகங்களால் கீரி என்னை ரொம்ப டார்ச்சர் செய்தார். நான் தப்பித்து விடக்கூடாது என்பதற்காக சில பெண்கள் என்னை அப்படியே அழுத்தி பிடித்துக் கொண்டார்கள். பின் நான் அங்கிருந்து எப்படியே தப்பித்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றேன். அந்த மருத்துவர்கள் அட்மிட் ஆகி சொல்லி போலீசில் தகவல் சொன்னதால் இது கேஸ் ஆனது.

-விளம்பரம்-

போலீஸ் புகார்:

கவிதா செய்தது எல்லாமே ராதாரவி சொன்னது தான். இதை அடுத்து நான் விருகம்பாக்கம் போலீசில் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தேன். ஆனால், அவர்கள் என் புகாரை எடுத்துக் கொள்ளவே இல்லை. பின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நான் என்னிடமிருந்த ஆதாரங்களுடன் புகார் கொடுத்தேன். அப்போது ராதாரவி, யூனியன் செயலாளர், கதிரவன் உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு போட்டு இருந்தார்கள். இருந்தாலும், என்னுடைய புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யாமலேயே கேசை முடித்து விட்டார்கள். காரணம், ராதா ரவிக்கு இருந்த பணபலம், ஆள் பலம் தான்.

ராதாரவி குறித்து சொன்னது:

அதேபோல் செயலாளர் கதிரவனும் பெண்களிடம் அசிங்கமாகவே பேசுவார். இதை ராதாரவி தட்டிக் கேட்கவே மாட்டார். காரணம், அவர் நல்லவரே கிடையாது. இதுவரை youtube-யில் அவர் எந்த பெண்களை ஆவது நன்றாக பேசியிருக்கிறாரா? நயன்தாராவை கூட அவர் அப்படித்தான் பேசினார்? அவரை எதற்காக திமுகவிலிருந்து நீக்கினார்கள்? அவர் நல்லவரே இல்லாத போது அவர் எப்படி அநியாயத்தை தட்டி கேட்பார். டப்பிங் யூனியன் தேர்தலில் கள்ள ஓட்டுகளை போட்டு ராதாரவி அணி எப்போதும் வெற்றி பெறுகிறது என்றெல்லாம் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

Advertisement