விஸ்வாசம் படத்திற்கு பின்னர் சம்பளத்தை ஏற்றிய அஜித்.! ஷாக்கில் போனி கபூர்.!

0
707
Ajith-59

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் செம ஹிட் அடைந்துள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது ‘தல59’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சதுரங்கவேட்டை, தீரன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய  பிரபலமடைந்த இயக்குனர் வினோத் குமார் இயக்கி வருகிறார்.  

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் தயாரிக்கும் இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் என்பது ஏற்கனவே அறிந்த ஒன்று தான்.ஆனால், அதை அப்படியே எடுக்காமல் சில மாற்றங்களை செய்துள்ளனராம்.  

இதையும் படியுங்க : தல59 படமே வராத நிலையில் ‘தல 60’ படத்தின் கதாநாயகி பற்றி வெளியான தகவல்.! 

- Advertisement -

ஸ்ரீதேவிக்கு அளித்த வாக்குறுதிக்காக இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அஜித். ஆனால், இந்த படத்தில் அஜித்தின் சம்பளத்தை கேட்டு போனி கபூர் ஷாக்கடைந்துள்ளார். இந்த படத்திற்கு அஜித் 50 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

அஜித் கடைசியாக நடித்த விஸ்வாசம் படத்திற்கு 40 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். தற்போது அதனை டபால் என 50 கோடியாக மாற்றியுள்ளார் அஜித். அதனால் தான் வித்யா பாலனை தவிர வேறு பெரிய நடிகர்களை இந்த படத்தில் கமிட் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement