பைக் பிரியர்களுக்காக புதிய நிறுவனம் துவங்கி இருப்பதாக அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார். கோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.
ஆனால், விமர்சன ரீதியாக இந்த படம் தோல்வியடைந்தது. , சமீப காலமாகவே அஜித் குறித்த ஏதாவது ஒரு அப்டேட் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி தான் வருகிறது. கடந்த ஆண்டு தான் அஜித் ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்து இருந்தார். அதன் பிறகு திருச்சியில் நடந்த ரைபில் கிளப் துப்பாக்கி சூடு போட்டியில் பங்கேற்று இருந்தார். இப்படி அஜித் அவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் பைக்கில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.
வலிமை படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் தனது பைக் பயணத்தை தொடங்கி இருக்கிறார். சமீப காலமாகவே அஜித்தின் பைக் ட்ரிப் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாக பரவி வருகிறது. இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித், ரசிகர் ஒருவரை விபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் நடிகர் அஜித் நேபாளத்தில் பைக்கில் சுற்றிய வீடியோக்கால் வைரலானது.
இது ஒருபுறம் இருக்க நடிகர் அஜித் உலகச் சுற்றுப் பயணத்தில் இறங்கியுள்ளார். அந்தப் பயணத்தை பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தன் கேமராக்களால் பதிவுசெய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த உலக சுற்று பய்ணமானது அஜித்தின் வாழ்க்கையிலேயே அவர் நிகழ்த்தவிருக்கும் மாபெரும் சாதனையாக இருக்கப் போவதால், அதை பதிவு செய்யவுள்ளாராம் அஜித். மேலும், முதல் கட்ட சுற்றுப் பயணம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிகிறது. இந்த மொத்த சுற்றுப் பயணமும் முடிந்ததும், அந்தப் பதிவை ஒரு ஆவணப் படமாகவும் அஜித்குமார் வெளியிட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் பைக் விரும்பிகளுக்காக ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் சுற்றுலா நிறுவனம் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன் ‘வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்.
Redesigned
— Suresh Chandra (@SureshChandraa) May 11, 2023
Havind ridden across Challenging Terrains and facing extreme weather conditions. Ajith sir has ridden across every Indian state n has covered Nepal n Bhutan aswell.
Next leg of world tour to begin in Nov 2023#AjithKumarWorldTour#AKWorldRideformutualrespect pic.twitter.com/M0gr6UhhVJ
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சம் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயனம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப் பயணங்களை வழங்கும்.
பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்து, உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும். தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்ற்ப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள்.
வாழு வாழ விடு – அஜித் குமார் ‘ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.