இது எல்லாத்துக்கும் அஜித், விஜய் தான் காரணம்..! ராகவா லாரன்ஸ் செய்த அதிரடி ட்வீட்.!

0
297
Ragava-Lawrance-Actor

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. ஒரு சாதரண நடன கலைஞராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய லாரன்ஸ் பின்பு ஹீரோ, இயக்கம் என பன்முக கலைஞராக திகழ்ந்து வருகிறார்.

திரைப்படங்களையும் தாண்டி ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் அறக்கட்டடளை மூலம் பல்வேறு நல திட்ட உதவிகளை புரிந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பிற்காக 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருந்தார்.

தமிழ் நடிகர்களிலேயே அதிக நிதியுதவி அளித்த லாரன்ஸை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் தான் செய்த உதவிக்கு தன்னை பாராட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்த டீவீட் செய்துள்ள ராகவா லாரன்ஸ், தான் உதவி செய்த பெருமையெல்லாம் இவர்களை தான் சாரும் என்று ஒரு லிஸ்டை வெளியிட்டுள்ளார்.

ragava lawrance

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் பதிவிட்டத்தில் ‘நண்பர்கள் மற்றும் ரசிகர்களே, ‘நான் கேரளாவிற்கு 1 கோடி ரூபாய் உதவி செய்ததற்காக என்னை பாராட்டையும், புகழ்ந்தும் இருந்தீர்கள் இந்த அணைத்து பெருமையும் நான் சீரோவாக இருந்த போது எனக்கு உறுதுணையாக இருந்து, என்னுடைய வளர்ச்சிக்கு உதவியாக இருந்த இவர்கள் தான் காரணம் ‘ என்று பதிவிட்டதோடு அத்துடன் ரஜினி, விஜய், பிரபுதேவா போன்ற பல்வேறு நபர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.