வெளியானது அஜித் ‘விஸ்வாசம் ‘ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்..!

0
260
Visvasam

வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் – சிவா கூட்டணி, மீண்டும் ‘விஸ்வாசம்’ படம் மூலம் ஜோடி சேர்ந்திருக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை வெளியானதைத் தொடர்ந்து படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருந்தது.

ரஜினி நடிக்கும் ‘பேட்ட’, விஜய் நடிக்கும் ‘சர்கார்’ என அவரவர் ரசிகர்களுக்கு ஹாட் நியூஸ் வருவது போல், அஜித் ரசிகர்கள் அவர்களுக்கு ஏதேனும் அப்டேட் வராதா என்று காத்துக்கொண்டிருநந்த வேலையில் இன்று (அக்டோபர் 25) படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இரட்டை வேடத்தில் மாஸ் மற்றும் க்ளாஸ் லுக்கில் இருந்த அஜித், செகண்ட் லுக் போஸ்டரில் லுக்கில் உள்ளார். இத்தனை நாட்கள் படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது இந்த செகண்ட் லுக் போஸ்டர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

‘விஸ்வாசம்’ படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்ததையடுத்து படத்தின் வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. மேலும்,படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்துவிட்டதாகவும், திட்டமிட்டபடி படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும் என்றும் உறுதியாகியுள்ளது.