5 ந்து வித்தியாசமான சண்டைக்காட்சிகள்.! அசத்தும் தல அஜித்..! விசுவாசம் சண்டைக்காட்சி எப்படி..!

0
1136
ajithaction
- Advertisement -

இயக்குனர் சிவா மற்றும் அஜித் 4வது முறையாக இணையும் விசுவாசம் படம் அஜித் ரசிகர்களிடேயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த படத்திற்கான ஷூட்டிங் இந்த மாதம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில்நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சண்டை காட்சிகள் குறித்த தகவலகள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

ajith

- Advertisement -

அஜித் நடித்துவரும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்புகள் இந்த மாதம்(ஜூன்) 17ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைத்ராபாத்தில் இந்த மாதம் ஜூன் 25 ஆம் தேதி தொடங்க உள்ளது என்று தகவல்கள் வெளியாகியது. தற்போது ஆந்திராவில் உள்ள ராமோஜி ஸ்டுடியோவில் ஒரு கிராமத்தை போன்ற செட் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இதனால் படத்தில் கிராம கதைகளும் இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.

30 நாட்கள் நடக்கவுள்ள இந்த படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் படமாக்கபட்டு வருகிறதாம். இந்த படத்தின் சண்டை இயம்குணராக திலீப் சுப்ராயன் பணியாற்றி வருகிறாராம். இவர் நடிகர் கார்த்திக் நடித்த தீரன் படத்தில் சண்டை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இதனால் அந்த படத்தை போன்றே இந்த படத்திலும் அக்ஷன் காட்சிகள் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

ajithstunt

சமீபத்தில் இந்த படத்தில் சண்டை காட்சிகள் குறித்து திலீப் சுப்ராயன் தெரிவிக்கையயில்’இந்த படத்தில் 5 சண்டை காட்சிகள் இருக்கிறது. 5 சண்டை காட்சிகளும் வித்யாசமாக இருக்கும். தற்போது காமெடி கலந்த சண்டை காட்சி ஒன்றை படமாக்கியுள்ளோம். மேலும் 4 சண்டைக்காட்சிகளை எடுக்கவுள்ளோம். இந்த படத்தில் வரும் சண்டை காட்சிகளை மிகவும் இயல்பாக எடுக்க இருக்கிறோம்’ என்று தெறிவித்துள்ளார். இதனால் இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement