தமிழ் சினிமா உலகில் கடந்த வருடம் வெளி வந்த படங்களில் அதிக வசூல் சாதனை செய்த படம் பிகில் தான். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளி வந்த படம் பிகில். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா அவர்கள் நடித்திருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்ட கதை ஆகும். இந்த படம் வெளி வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதோடு வசூல் சாதனையிலும் பட்டையை கிளப்பியது என்று சொல்லலாம். இந்த நிலையில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஆண்டின் இறுதி வரை பல படங்கள் வெளியாகி இருந்தது. அதில் சில படங்கள் வெற்றியும் அடைந்து இருக்கிறது, தோல்வியும் அடைந்தி இருக்கிறது.
அந்த வகையில் பல படங்கள் வசூல் சாதனை முறியடித்து உள்ளது. மேலும், விஜயின் பிகில், அஜித்தின் விசுவாசம், ரஜினியின் பேட்ட என பல சாதனை படங்களும் வெளிவந்தன. சமீப காலமாகவே டிவி சேனல்களில் புது புது படங்கள் எல்லாம் வெளியாகி வருகிறது. அதிலும் புது புது படங்கள் எல்லாம் வெளியாகி சில வாரங்களில் டிவி சேனல்களில் ஒளிபரப்புகின்றனர். இந்நிலையில் இந்த படங்கள் எல்லாம் டிவி சேனல்களிலும் கூட வெளியாகி உள்ளது. இதில் டிவியில் டிஆர்பி ரேட்டிங் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை விஜய்யின் பிகில், சர்க்கார் படம் முந்த முடியவில்லை.
இத்திரைப்படத்தில் அஜித் குமார், நயன்தாரா, விவேக், யோகிபாபு ஆகியோர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர். இத்திரைப் படமானது அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் திரைப் படங்களை இயக்கிய சிவா அவர்கள் தான் எழுதி, இயக்கினார். தியாகராஜன் அவர்கள் தான் இந்த படத்தை தயாரித்தார். இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்து உள்ளார். அதோடு இந்த படம் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. மேலும், பிற மொழிகளில் கூட இந்த படம் மாபெரும் சாதனையை பெற்றது.
வசூல் சாதனையில் விஸ்வாசம் படம் பிகில் படத்தை விட பின் தங்கி இருந்தாலும் டிஆர்பி ரேட்டிங்கிலும், மக்கள் மனதிலும் அதிக இடம் பிடித்த படமாக விஸ்வாசம் படம் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் கூட பிகில் படத்தை விட விஸ்வாசம் படம் தான் பல பிரிவுகளில் விருதுகளை தட்டிச் சென்றது. இதனால் தல ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளார்கள். இதில் கொடுமை என்னவெனில் சிவகார்த்திகேனின் சீமராஜா படம் பெற்ற trp யை விட பிகில் படம் குறைவான Trp யை பெற்றுள்ளது. , டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 லிஸ்ட் இதோ
விஸ்வாசம் – 18143000
பிச்சைக்காரன் – 17696000
சர்கார் – 16906000
சீமராஜா – 16766000
பிகில் – 16473000