நியூட்ரினோ அபாயம்..! சிறையில் இருக்கும் அஜித்..! தம்பி செண்டிமெண்ட்..! பரவும் விசுவாசம் கதை

0
921
visvasam
- Advertisement -

நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா கை கோர்க்கும் நான்காவது படம் “விசுவாசம் “. இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வந்துகொண்டு இருக்கும் நிலையில் இந்த படத்தின் கதை என்னவென்று ஒரு சில தகவல்கள் பரவி வருகிறது.

-விளம்பரம்-

visvasam

- Advertisement -

இயக்குனர் சிவா, அஜித்தை வைத்து எடுத்த வீரம், வேதாளம் போன்ற படங்கள் ஹிட்டாகி இருந்தது. ஆனால் இவர்கள் இருவர் கூட்டணியில் கடைசியாக வெளிவந்த “விவேகம்” படம் ரசிகர்கள் மத்தியில் சற்றும் ஏமாற்றத்தையே தந்தது.

இருப்பினும் நடிகர் அஜித் குமார், இயக்குனர் சிவா மீது நம்பிகை வைத்து “விசுவாசம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதை “கிராமத்தில் உள்ள தம்பி அஜித்தை பார்க்க அண்ணன் அஜித் சிறையில் இருந்து கிராமத்திற்கு செல்கிறார். அப்போது கிராமத்தில் இருக்கும் தம்பி அஜித், எதிரிகளால் கொள்ளப்பட அவர்களை பழி வாங்க அண்ணன் அஜித் கிளம்புகிறாராம்”

-விளம்பரம்-

இந்த படத்தில் அண்ணன், தம்பி பாசத்தையும் சேர்த்து நியூட்ரிநோ பிரச்னை பற்றி கூறும் ஒரு சமூக கருத்தும் இந்த படத்தில் அடங்கியுள்ளதாம். ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. படம் வெளியாகும் வரை பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

Advertisement