சதுரங்க வேட்டை 2 ‘ல் நடிக்கப்போவது – தலயா, தளபதியா? வெளிவந்த தகவல் !

0
2182
vijay - ajith

தற்போது தமிழ் சினிமாவில் இரண்டு படங்கள் தான் டாப். ஒன்று தீப்பாவளிக்கு வெளியான மெர்சல் மற்றொன்று கடந்த வாரம் நயன்தாராவின் நடிப்பில் வெளியான அறம். இரண்டு படங்களும் தான் தியேட்டர்களில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.
Sathuranga Vettai 2மேலும், நாளை வெள்ளிக்கிழமையன்று கார்த்திக் நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் வெளியாகிறது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார். இந்த படத்தினை வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கார்த்தி போலீசாக நடித்துள்ளார். படம் வித்யாசமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மெர்சல் மாஸ் கலெக்ஷன் ! வெளிநாடு வசூல் – துல்லியமான புள்ளிவிபரம் ?

இந்நிலையில் ஒரு பேட்டியில் இயக்குனர் வினோத்திடம் சில கேள்விகல் கேட்க்கப்பட்டன. அதில், சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தல அஜித்திடம் கேட்கப்பட்டதா? என கேட்டபோது, அவர் கூறியதாவது,
mersal‘ஆம், நானும் கேள்விப்பட்டேன். அப்படி தல மட்டும் சதுரங்க வேட்டை -2 படத்தில் நடிப்பதாக இருந்தால் அருமையாக இருக்கும் எனக் கூறினார். இதனைக் கேட்ட அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே போல், தளபதி ரசிகர்களும், இதுவரை பாஸிடிவ் ரோலில் மட்டுமே தளபதி பார்த்து வருகிறோம், இப்படி ஒரு படத்தில் நெகடிவ் ரோலில் நடித்தால், தளபதியை வித்யாசமாக பார்க்கலாம், எனப் பேசி வருகின்றனர். இதனால் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் இதில் தலயா? இல்லை தளபதியா? என்ற போர் மீண்டும் உருவாகியுள்ளது.