ஒன்னில்ல ரெண்டில்ல துப்பாக்கி போட்டியில் அஜித் வாங்கிய பதக்கம் எத்தனை தெரியுமா ?

0
379
ajith

தமிழ் சினிமாவில் மிக உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர்தான் நம்ம “தல அஜித்”. மேலும்,இவரை திரையுலகம் அல்டிமேட் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். நம்ம தல அஜித் அவர்கள் சினிமா துறையில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அதிலும் 2019 ஆம் வருடம் வெளிவந்த நேர்கொண்டபார்வை ,விஸ்வாசம் படம் பட்டையை கிளப்பியது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு மெகா ஹிட் படங்களாக அமைந்தது. இதனை தொடர்ந்து அஜித் அவர்கள் வலிமை படத்தில் நடித்து உள்ளார்.

இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக வைரலாக பரவி வந்தது.சென்னை பழைய கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரைபிள் கிளப்பிற்கு செல்ல வேண்டிய பாதை மாறி புதிய கமிஷனர் அலுவலகம்சென்றார் அஜித். கமிஷனர் அலுவலகத்துக்குள் அஜித் நுழைந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்ததோடு ரைபிள் கிளப்பிற்கு வழி கூறி அனுப்பி வைத்தனர்.

இதையும் பாருங்க : அட, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா குழந்தை நட்சத்திரமாக நடித்தாளாரா ? அதுவும் ஆண் குழந்தையாக.

- Advertisement -

அஜித் குமார் அவர்கள் நடிப்பில் மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி சாதனை புரிந்தும் வருகிறார்.அஜித் அவர்கள் இளம் வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். அதே போல பல விதமான பொழுது போக்கில் ஈடுபட்டு வரும் அஜித் அதை கூட சீரியஸாக எடுத்துக்கொண்டு தான் பயிற்சி செய்வார். அந்த வகையில் துப்பாக்கி சுடுதல் துறையில் சாதிக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் தல அஜித் சமீபத்தில் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற 46ஆம் ஆண்டு துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றுக்கொண்டார். அதில் தற்போது சிறந்த முறையில் விளையாடி இந்த துப்பாக்கி சுடும் விளையாட்டில் தங்க மெடல் வென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டியில் ஒன்றல்ல ரெண்டல்ல நடிகர் அஜித் 7 பதக்கங்களை வென்றுள்ளார். இதோ அதன் விவரம்.

-விளம்பரம்-
Advertisement