அஜித் பிறந்த அதே மாதத்தில் பிறந்த அப்பு குட்டி. அஜித்தை போலவே பிறந்தநாளில் வெளியிட்ட அறிக்கை.

0
610
appukutty
- Advertisement -

லகமே கொரோனாவினால் திண்டாடி கொண்டு உள்ளது. கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் 56342 பேர் பாதிக்கப்பட்டும், 1886 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் ஊரடங்கு உத்தரவை இன்னும் சில நாட்களுக்கு நீட்டித்து உள்ளார்கள். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்குகிறார்கள்.

-விளம்பரம்-

பொது இடங்கள்,பள்ளிகள்,கல்லூரிகள், திரையரங்கம், சினிமா படப்பிடிப்பு என அனைத்தும் முடங்கியுள்ளது. மேலும், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல பேர் சமூக வலைத்தளங்களில் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் அப்புக்குட்டி அவர்கள் தன்னுடைய பிறந்தநாளான இன்று கொரோனா குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறி இருப்பது, இந்த காலம் நம் அனைவருக்கும் சோதனையான காலம் மட்டும் அல்லாமல் இக்கட்டான நெருக்கடியான காலம். இது மனிதனின் மனிதாபிமானத்தையும், நேர்மையையும் சோதிக்கும் நேரம். இதுவரை இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. ஆனால்,கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடு இல்லை. அதுமட்டும் இல்லாமல் இந்த கொரோனாவினால் பல மனிதர்களின் உண்மை முகம் அடையாளம் காண முடிகிறது. நாட்டில் நிலவும் இந்த இக்கட்டான சூழலில் தன்னார்வம் உடைய மனிதர்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

எத்தனையோ பேர் பெரிய மனதோடு உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த கஷ்ட காலத்தில் ஏதாவது உதவி செய்யுங்கள், முடிந்ததை உதவி செய்யுங்கள், சகமனிதனை மதியுங்கள். சிரமப்படுவோருக்குத் தன்னளவில் ஏதாவது செய்யுங்கள் என்பது தான் என்னுடைய வேண்டுகோள். நானும் என்னால் முடிந்தவற்றை செய்து கொண்டிருக்கிறேன். இன்று என்னுடைய பிறந்த நாள். ஆனால், எனக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று ஒன்றும் இல்லை.

-விளம்பரம்-

நாட்டில் நிம்மதி திரும்பினால் போதும். இந்த கொரோனா போராட்டம் எப்போது முடியும் என்று தெரியவில்லை. இந்த பிரச்சனை எல்லாம் முடிந்து எல்லாரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பது தான் என்னுடைய பிரார்த்தனை. இறைவன் கூடிய விரைவில் இந்த பிரச்சனையை முடித்து விடுவார். அனைவரும் பாதுகாப்பாகவும், மன தைரியத்துடனும் இந்த கொரோனாவை எதிர்கொள்வோம். மக்கள் தைரியமாகாவும், பாதுகாப்பாகவும் இருந்தால் சந்தோஷம் கிடைக்கும் என்று கூறினார்.

அப்புக்குட்டி அஜித் நடித்த வீரம் படத்தில் நடித்திருந்தார். மேலும் கடந்த மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலாமாக கொண்டாட திட்டமிட்டு இருந்தனர். ஆனால், கொரோனா பாதிப்பால் அனைவரும் கஷ்டப்பட்டுகொண்டு இருக்கும் வேலையில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று அஜித் அறிக்கை வெளியிட்டு இருந்தார் குறிப்பிடத்தக்கது.

Advertisement