இலங்கைப் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி நடிகர் அர்னவ் கழட்டி விட்டு விட்டார் என்று திவ்யா ஆதாரத்துடன் வெளியிட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்திஇருந்த நிலையில் தற்போது திவ்யா தொடர்பான ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளார் அர்னவ். கடந்த ஆண்டு சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருந்தது அர்னவ்-திவ்யா விவகாரம் தான். இவங்க வேற யாரும் இல்லைங்க, செல்லம்மா சீரியல் நடிகர் அர்னவ், செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து இருந்தார்கள்.
பின் கடந்த ஆண்டு தான் ரகசியமாக திருமணம் செய்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருந்தார் . அதோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார்.
இதனை அடுத்து காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் திவ்யா புகார் கொடுத்து இருந்தார்.இதை தொடர்ந்து திவ்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அர்னவை கைது செய்தனர். பின் அர்னவ் ஜாமினில் வெளியில் வந்தார். வெளியில் வந்த பின்னரும் கர்ப்பமாக இருந்த திவ்யாவை அர்னவ் கண்டுகொள்ளவே இல்லை.
இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்தது.ஆனாலும், திவ்யாவை நேரில் சென்று சந்திக்காமல் இருந்தார் அர்னவ். மேலும், திவ்யாவும் தனது மகளை இதுவரை அர்னவ்விற்கு காட்டாமல் இருந்து வருகிறார். குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் தனது குழந்தையுடன் ஷூட்டிங்கிற்கு சென்று இருந்தார் திவ்யா. இந்த நிலையில் சமீபத்தில் திவ்யா கைக்குழந்தையோடு பிரபல டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
அதில் அவர், அர்னவ் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார். அவர்கள் எல்லோரும் எனக்கு தொடர்ச்சியாக போன் செய்தும், இன்ஸ்டாகிராம் மூலமும் பல ரகசியங்களை தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை நான் இங்கே மக்களுக்கு தெரியப்படுத்துகிறேன். இனி யாரையும் அர்னவால் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் என்னுடைய நோக்கம் என்று கூறி அர்னவ் ஏமாற்றிய பெண்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட்டார்.
இப்படி இந்த விஷயம் மட்டும் இல்லாமல் அர்னவ் குறித்து இன்னும் பல விஷயங்கள் பற்றி என்னிடம் ஆதாரமும் இருக்கு. எல்லாத்தையும் விரைவில் வெளியிடுவேன் என்று கூறியிருக்கிறார். இப்படியொரு நிலையில் திவ்யாவிற்கும் சீரியல் நடிகர் ஈஸ்வருக்கும் தொடர்பு இருந்ததாக அர்னவ் சில ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ஈஸ்வர், மஹாலக்ஷ்மியுடன் தொடர்பில் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.