சிம்ரன் ரோலுக்காக இறுதி நேரத்தில் மாற்றப்பட்ட நடிகை – இன்னிக்கி இவங்க அட்ரஸ்ஸே இல்ல பாவம்.

0
5472
vaali
- Advertisement -

இயக்குனரும் நடிகுருமான எஸ் ஜே சூர்யா அஜித்தை வைத்து எடுத்த படம் வாலி.தனது முதல் படத்திலேயே ஒரு மாபெரும் நடிகரை வைத்து சூப்பர் டுபர் ஹிட்டை அளித்தார் எஸ் ஜே சூர்யா. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் அவருக்கு கார், பைக் எல்லாம் கூட பரிசலித்தார் என்ற செய்திகளும் உண்டு. அதனை ஒரு பேட்டி ஒன்றில் கூட எஸ் ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
நினைவிருக்கும் வரை நடிகையா இவங்க ...

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரனும், கற்பனை காதலியாக ஜோதிகாவும் அறிமுகமாகி இருந்தார். முதலில் ஜோதிகவிற்கு பதிலாக கீர்த்தி ரெட்டி தான் நடிக்கவிருந்தாரம். அப்போது அதர்க்கான அறிவிப்புகள் கூட அறிவிக்கபட்டது. அதே போல ரோஜாவும் இந்த படத்தில் நடிப்பதாக இருந்தது ஆனால், அதுவும் நடக்காமல் போனது.

இதையும் பாருங்க : நடத்திய போட்டோ ஷூட் வீணாகல – ஹீரோயின் ஆன அனிகா. அதுவும் இப்படி ஒரு படத்தில்

- Advertisement -

நடிகை கீர்த்தி ரெட்டி வேறு யாரும் இல்லை பிரபுதேவா நடிப்பில் 1999ல் வெளியான ‘நினைவிருக்கும் வரை’ படத்தில் நடித்தவர் தான். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர், தெலுங்கில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘கன்ஷாட்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் தமிழில் நாசர் நடிப்பில் வெளியான ‘தேவதை’ என்ற படத்தின் மூலம் அறிமுகனார்.

அந்த படத்திற்கு பின்னர் இவர் தமிழில் நந்தினி, ஜாலி, இனியவளே போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு தமிழில் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவிலும் இவருக்கு சொல்லிக்கொள்ளுபடி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒருவேலை வாலி படத்தில் நடித்திருந்தால் தமிழில் இவர் பெரிய நடிகையாக வலம் வந்திருப்பாரோ என்னவோ.

-விளம்பரம்-
Advertisement