‘AK62’ – விக்னேஷ் சிவனுக்கு அஜித்திடம் இருந்து பறந்து சென்ற ஆர்டர். என்ன தெரியுமா ?

0
352
ak62
- Advertisement -

ஏகே 62 படம் குறித்து விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட ஆர்டர் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், அஜித்தின் வலிமை படம் வசூலில் 300 கோடியை நோக்கி சென்று இருந்ததாக இந்த படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

ஏகே 61 படம்:

மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். சமீபத்தில் அதற்கான புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. அப்படியே இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார். தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு:

குறுகிய காலத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. முதலில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடிப்பதாக கூறி இருந்த நிலையில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து அஜித்தின் ஏகே 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக உள்ள தகவல் சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. தற்போது விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணியில் படம் உருவாக இருப்பது ரசிகர் மத்தியில் பெரிய சந்தோஷத்தை கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

லைகா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்படம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஏகே 62 படத்தின் கதை குறித்தும், டயலாக் குறித்தும் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், இந்த படம் விவசாயிகளை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. தென் தமிழகத்தில் பாரம்பரிய விவசாயத்தை மேற்கொள்ளும் கதாநாயகன் தரமான உணவுகளை மக்களுக்கு கொடுக்க வேண்டுமென நினைக்கிறார். அதற்காக பாரம்பரிய முறைப்படி அனைத்து உழவு பணிகளை மேற்கொண்டு பயிர்களை விளைவிக்கிறார்.

அஜித் போட்ட ஆர்டர்:

இதில் விவசாயம் மற்றும் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் பிசினஸாக மாற்றிவிட்டதாக படத்தில் சொல்லப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது கார்ப்பரேட் களையும் இது சார்ந்த பிசினஸ் மாடலையும் விமர்சிக்கும் வகையில் படத்தில் வசனம் இடம்பெற இருப்பதாக தெரிகிறது. இதில் தான் அஜித் ஒரு ஆர்டரை இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு போட்டிருக்கிறார். அது என்னவென்றால், எந்த வகையிலும் அரசியல் சார்ந்த வசனங்கள் படத்தில் இடம் பெறக்கூடாது என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது வைரலாகி வருகிறது

Advertisement