கைதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அப்படியே காப்பி அடித்த ஹாலிவுட் படம் – நீங்களே பாருங்க.

0
7901
kaithi

பொதுவாக ஹாலிவுட் படங்களில் இருந்து தான் காட்சிகளும் போஸ்டர்களும் காப்பி அடிக்கப்படும் ஆனால், தமிழில் வெளியான கைதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹாலிவுட் படமே காப்பி அடித்துள்ளது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படம் “கைதி”. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் அவர்கள் இசை அமைத்து இருந்தார்.

மேலும், இந்த படத்தில் சித்திரம் பேசுதடி நரேன், அர்ஜுன் தாஸ், ரமணா, தீனா ஆகியோர் நடித்து இருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்ஷன், திரில்லர் படம். சிறை வாழ்க்கையை அனுபவித்த ஒரு மனிதனின் கதையை எடுத்துச் சொல்லும் படம் தான் கைதி. கைதி படத்தில் ஹீரோயின், பாடல்கள் எதுவும் இல்லாத கதைக்களமாக உருவாக்கி இருந்தார் இயக்குனர்.

- Advertisement -

விஜய்யின் பிகில் படத்திற்கு போட்டியாக கைதி படம் திரை அரங்கிற்கு வந்தது. கைதி படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை போலவே ஹாலிவுட் படத்தின் போஸ்டர் ஒன்று கடந்த ஆண்டு வெளியாகி உள்ளது. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Exclusive: Director Charles Officer & Saul Williams Talk “Akilla's Escape”  — BlackFilmandTV.com

2019ஆம் ஆண்டு வெளியான, கைதி திரைப்படத்தின் First லுக்கை பார்த்து, அப்படியா காப்பி அடித்ததுபோல், 2020ல் வெளியான akilla’s escape என்ற ஹாலிவுட் படத்தின் போஸ்டரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கைதி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement