தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் மூலம் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறும் பாலிவுட் நடிகர்.

0
4875
- Advertisement -

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அக்ஷய் குமார். இவர் இதுவரை ஹிந்தியில் 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த சௌகான்ந் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். 90 கால கட்டங்களில் தொடங்கி தற்போது வரை இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழில் கூட படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் 2.0 என்ற படத்தில் நடிகர் அக்ஷய் குமார் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் ,மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.

-விளம்பரம்-

இவருடைய படங்கள் என்றாலே ரசிகர்கள் எல்லோரும் திருவிழா போன்று கொண்டாடி வருகிறார்கள். இவர் தன்னுடைய நகைச்சுவை நடிப்பு திறமையால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து உள்ளார்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கும் ஒரு புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்காக நடிகர் அக்ஷய் குமார் வாங்கும் சம்பளத்தை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள். பாலிவுட்டில் தனு வெட்ஸ் மனு மற்றும் ஜீரோ புகழ் படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் அவர்கள் தான் தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார்.

- Advertisement -

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய் குமார் அவர்கள் நடிக்க உள்ளார். மேலும், இந்த படத்தில் சாரா அலிகான் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. பாலிவுட்டை பொறுத்த வரை நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வரும் படங்கள் எல்லாம் கோடிக்கணக்கான அளவில் வசூலை வாரி குவித்து வருகின்றனர். அவரது படங்களின் டிஜிட்டல் மற்றும் டிவி உரிமைகளைப் பெற நிறுவனங்களுக்கு இடையே போட்டி நிலவும். அந்த அளவிற்கு அவருடைய படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். இதனாலேயே இவருடைய சம்பளங்கள் எல்லாம் மிக வேகமாக உயர்ந்து விட்டது. அந்த வகையில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்க உள்ள புதிய படத்தில் அக்ஷய் குமாருக்கு 120 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை கேட்ட ரசிகர்கள் எல்லோரும் தலை சுற்றி போய் உள்ளார்கள். சமீபத்தில் கூட போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட 2019 ஆம் ஆண்டிற்கான உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் நான்காவது இடத்தை நடிகர் அக்ஷய் குமார் பெற்றிருந்தார். அது மட்டும் இல்லாமல் பாலிவுட்டில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகரும் இவர் தான். மேலும், இந்த ஆண்டில் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் 3 படங்கள் வெளியாக உள்ளன. ரோஹித் ஷெட்டியின் சூரியவன்ஷி, பிரித்திவிராஜ் வரலாற்றுப் படம், லட்சுமிபாம். இதில் அவர் முதன் முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement