ஆண்டுக்கு ஒரு சொகுசு கார் – கணவரின் பிறந்தநாளுக்கு இந்த ஆண்டும் ஒரு சொகுசு காரை பரிசாக கொடுத்த ஆல்யா மானஸா.

0
2249
sanjeev
- Advertisement -

தன்னுடைய காதல் கணவர் சஞ்சீவிக்கு ஆலியா மானசா வாங்கி தந்திருக்கும் பிறந்தநாள் பரிசு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

அதோடு இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று முடிவடைந்த ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார்.

- Advertisement -

சஞ்சீவ் – ஆல்யா நடிக்கும் சீரியல்கள்:

அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் பிரபலமாக சென்று கொண்டு இருக்கும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். அதற்கு பின் மீண்டும் ஆல்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. அதோடு இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் அடிக்கடி வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். இவர்கள் பதிவிடும் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பின் மீண்டும் ஆலியா அவர்கள் சின்னத்திரையில் நடித்து வருகிறார்.

சஞ்சீவ் – ஆல்யா குடும்பம்:

தற்போது இவர் சன் டிவியில் சரிகம புரொடக்ஷன் தயாரிக்கும் இனியா தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருவருமே தங்களுடைய கேரியரில் கவனமாக இருந்தாலும் தங்களுடைய குழந்தைகளுடனும் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது சஞ்சீவி அவர்கள் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

ஆலியா கொடுத்த பரிசு:

இவருடைய பிறந்தநாளுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே வாழ்த்து கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் சஞ்சீவியின் மனைவியும், நடிகை ஆலியா அவர்கள் தன்னுடைய கணவருக்கு பிறந்தநாளுக்கு ஒரு சிறப்பான பரிசை கொடுத்திருக்கிறார். அதாவது, அவர் மிகப்பெரிய மகேந்திரா thar கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார். அந்த கார் மீது சஞ்சீவ் உட்கார்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து தன்னுடைய மனைவிக்கு நன்றி கூறியிருக்கிறார்.

சஞ்சீவ்-ஆலியா இடம் இருக்கும் கார்கள்:

மேலும், கடந்த ஆண்டு ஆல்யா மானசாவை இன்ஸ்டாகிராமில் 3மில்லியன் போர் தொடர்வதை கொண்டாடும் விதமாக சஞ்சீவ் அவர்கள் 30 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள ஒரு புதிய ‘Mini Cooper’ காரை பரிசாக வழங்கி இருந்தார். அதற்கு முன்பு தான் கடந்த 2020 ஆம் ஆண்டு benz காரை வாங்கியதாக சஞ்சீவ் பதிவிட்டு இருந்தார். பின் சஞ்சீவ் தான் ஏற்கனவே வைத்திருந்த Mercedes C- class என்ற 50 லட்ச ரூபாய் காரை தனது சகோதரருக்கு கிப்ட்டாக கொடுத்திருக்கிறார். அந்த கார் வாங்கி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் தங்களின் ‘Mini Cooper’ காரை கூட விற்று இருந்தார்கள். தற்போது இவர்கள் மீண்டும் பல லட்சம் மத்தியில் புதிய காரை வாங்கி இருக்கின்றனர்.

Advertisement