நாட்டில் இன்னும் மத பாகுபாடு இருப்பது வருத்தமளிக்கிறது – கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதாக அமலா பால் வேதனை.

0
402
- Advertisement -

மலையாள சினிமா துறையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு எத்தனையோ நடிகைகள் காலடி எடுத்து வைத்து பிரபலம் அடைந்துள்ளனர். நயன்தாரா, பாவனா, மாளவிகா மோஹனன் என்று பல  மலையாளத்தில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வகையில் கேரள நாட்டில் இருந்து தமிழ் சினிமாவிற்கு கவர்ச்சி புயலாக நுழைந்தவர் நடிகை அமலா பால். சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாகவும் உள்ளார்.

-விளம்பரம்-

நடித்த படங்கள் :

இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.தமிழில் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது.

- Advertisement -

முதல் திருமணம் :

2014 ஆம் நடைபெற்ற இவர்களது திருமணம் மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது.இந்த நிலையில் இயக்குனர் விஜய் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். தனது முதல் கணவர் திருமணம் செய்து கொண்டது குறித்து எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கிறார் நடிகை அமலாபால்.

இரண்டாம் திருமணம் சர்ச்சை :

இந்த நிலையில்கடந்த 2020 ஆம் ஆண்டு தான் நடிகை அமலா பால் பிரபல பாடகர் பவிந்தர் சிங் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. மேலும், கடந்த 2020 ஆன் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி பவிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பாலுடன் மணக்கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். ஆனால், தனக்கு திருமணம் நடக்கவில்லை என்று அமலா பால் கூறி இருந்தார். சமீபத்தில் அமலா பால் அளித்த புகாரின் பெயரில் பவிந்தர் சிங் கைது செய்யப்பட்ட நிலையில் தனக்கும் அமலா பாலுக்கும் பதிவு திருமணம் நடந்ததற்காக ஆதாரங்களை பவிந்தர் சிங் சமர்ப்பித்த நிலையில் அவர் ஜாமினில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

அமலாபால் கோவிலுக்குள் மறுப்பு :

இந்த நிலையில் தான் நடிகை அமலா பால் கடந்த திங்கள் கிழமை கேரளாவில் உள்ள எர்ணாகுளம் என்ற பகுதியில் உள்ள மகாதேவர் கோவிலுக்கு வழிபட சென்றுள்ளார். ஆனால் அவரை அங்கிருந்த கோவில் நிர்வாகம் இவர் கிறிஸ்த்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதினால் கோவிலுக்குள் இவரை அனுமதிக்க வில்லை. இதனால் அதிர்த்தியடைந்த அவர் பார்வையாளர்கள் பதிவேட்டில் நம்முடைய நாட்டில் 2023லும் மத பாகுபாடு என்பது இருப்பது தனக்கு ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது என்று கூறியிருந்தார்.

மேலும் இதனால் கடவுளை தூரத்தில் இருந்து பார்த்துதான் அருளை பெற முடிந்தது என்றும், விரைவில் இது போன்ற மத பாகுபாடுகளில் இருந்து விடுபடுவோம் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த மத அடிப்படை அல்லாமல் எல்லோரும் சமமாக நடத்தப்படும் காலம் வரும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கோவில் நிர்வாகத்தின் பதில் :

இந்த தகவல் வைரலாக நிலையில் இது குறித்து கோவில் நிர்வாகம் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளது. அவர்கள் கூறுகையில் திருவைராணிக்குளம் மகாதேவர் கோவிலில் செயலாளர் கூறுகையில் இதற்கு முன்னரும் பிரபலங்கள் வந்துள்ளார். பிரபலம் வந்தால் அந்த நிகழ்வு சர்ச்சையாகி விடுகிறது. கோவிலில் நீண்ட காலமாக இருக்கும் நெறி முறைகளைத்தான் வெகு காலமாக பின்பற்றி வருகிறோம் என்று கூறியுள்ளது கோவில் நிர்வாகம்.

Advertisement